மரவள்ளிக்கிழங்கு பொரியல் செய்வது எப்படி

Loading...
Description:

div class=”separator” style=”clear: both; text-align: center;”>

தேவையான பொருட்கள் :

மரவள்ளிக்கிழங்கு – 2 துண்டுகள்
[பாட்டி மசாலா] மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் – 2
வெங்காயம் – 1
காய்ந்த மிளகாய் – 2
தேங்காய் துருவல் – 1/4 கப்
கடுகு – 1/2 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு எண்ணய் – தேவையானது

செய்முறை:

மரவள்ளிக்கிழங்கின் மேல் தோல் நடு வேர் இரண்டையும் அகற்றிவிட்டு சிறு சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

தேங்காய் துருவல், பச்சை மிளகாய், வெங்காயம் மூன்றையும் விழுது போல அரைத்துக்கொள்ளவும்.

ஒரு வாணலியில் சிறிது தண்ணீர் சேர்த்து நறுக்கி வைத்த மரவள்ளிக்கிழங்கு துண்டுகளை போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு, [பாட்டி மசாலா] மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். நன்கு வெந்ததும் தண்ணீரை வடிகட்டி வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து அரைத்து வைத்துள்ள விழுதினை சேர்த்து வதக்கவும்.

பச்சை வாசனை போனவுடன் வேகவைத்த மரவள்ளிக்கிழங்கு துண்டுகளை சேர்த்து பிரட்டி இறக்கி பரிமாறவும்.

சூப்பரான மரவள்ளிக்கிழங்கு பொரியல் ரெடி.

Post a Comment