மணப்பாறை முறுக்கு

Loading...
Description:

sl3761

மணப்பாறை முறுக்கு

என்னென்ன தேவை?

பச்சரிசி மாவு – 2 கப்
கருப்பு எள் – அரை டீஸ்பூன்
ஓமம் – கால் டீஸ்பூன்
பெருங்காயம் – சிறிது
தண்ணீர் – தேவையான அளவு
உப்பு – தேவையான அளவு
வெண்ணெய் / டால்டா – 2 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு.

எப்படிச் செய்வது?

மாவை கல் இல்லாமல் சலித்துக் கொள்ளவும். அத்துடன் உப்பு, வெண்ணெய், ஓமம், எள், பெருங்காயம், தண்ணீர் சேர்த்து  முறுக்குப் பதத்தில் பிசையவும்.முறுக்கு அச்சில் போட்டு சூடான எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

உங்கள் கவனத்துக்கு…

* காரம் தேவைப்பட்டால் மிளகாய் தூள் சேர்த்து பிசையவும்.
* பூண்டு, புதினா, பச்சை மிளகாய், தேங்காய்ப் பால் என்று எந்த காம்பினேஷனிலும் முயற்சிக்கலாம்.
* இன்னும் சுலபமாக அரிசி மாவு, கடலை மாவு, பொட்டுக் கடலையை பொடித்து, மூன்றும் சம அளவு எடுத்துப் பிசைந்தும்  முறுக்கு செய்யலாம். இது மணப்பாறை முறுக்கு அல்ல. எனினும், ஒரு மாறுதலான சுவைக்கு முயற்சிக்கலாம்.

Post a Comment