மட்டன் வெள்ளை குருமா tamil samayal kurippu

Loading...
Description:

மட்டன் வெள்ளை குருமா

மட்டன் சமையலில் இது புதுமாதிரி. இதை தயார் செய்யும்போதே இதன் வித்தியாசமான நறுமணம் உங்கள் உமிழ்நீர்ச் சுரப்பிகளை சுவையை எதிர்கொள்ளத் தயாராக்கி விடும். செய்து சுவைக்கலாம் தானே!

தேவையான பொருட்கள்:

மட்டன் -1/4 கிலோ
தக்காளி -1/4 கிலோ
பச்சை மிளகாய் -4 (கீறியது)
தேங்காய் -1/2 முடி
கசகசா -2 டீஸ்பூன்
தயிர் -1/2 கப்
சோம்பு -1 டீஸ்பூன்
பட்டை -2
ஏலக்காய் -2
லவங்கம் -2
வெங்காயம் -1 கப்(நறுக்கியது)
இஞ்சி -சிறு துண்டு
பூண்டு – 5 பல்
முந்திரிப்பருப்பு -4
உப்பு, எண்ணெய் -தேவைக்கேற்ப

செய்முறை:

மட்டனை சுத்தம் செய்து வேக வைத்துக் கொள்ளவும். தேங்காய், கசகசா, இஞ்சி, பூண்டு, முந்திரியை அரைத்துக் கொள்ளவும்.

ஒரு அகலமான பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சோம்பு, பட்டை, லவங்கம், ஏலக்காய் போட்டு தாளிக்கவும். வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாயை வதக்கவும். மட்டனை சேர்க்கவும்.

அரைத்த தேங்காயை ஊற்றி போதுமான உப்பு சேர்க்கவும். தயிரையும் சேர்த்து நன்கு கலக்கி குறைந்த தீயில் சிறிது நேரம் வைத்திருந்து இறக்கவும். கொத்தமல்லி இலையை சிறிது கிள்ளிப் போடவும்.

இப்போது மட்டன் வெள்ளை குருமா ரெடி.

இதே முறைப்படி மட்டனுக்குப் பதிலாக காய்கறி சேர்த்து குருமா, உருளைக்கிழங்கு குருமா ஆகியவையும் தயாரிக்கலாம்.

Post a Comment