மட்டன் விண்டாலு

Loading...
Description:

13895184_1058745554172500_6562740271456152829_n


தேவையான பொருட்கள் :

மட்டன் – அரை கிலோ

நெய் – 150 கிராம்

கொத்தமல்லி இலை – 1/2 கட்டு(நறுக்கிக் கொள்ளவும்)

வெங்காயம் – நான்கு(பொடியாக நறுக்கிக் கொள்ளவும்)

விண்டாலு மசாலாவிற்கு:

சீரகம் – 1 டீஸ்பூன்

சின்ன வெங்காயம் 12

கொத்தமல்லி விதை 1 மேஜைக்கரண்டி

மிளகு 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1/2 டீஸ்பூன்

காஷ்மீர் மிளகாய் – 14

ஏலக்காய் – 3

பட்டை 2 இன்ச்

கிராம்பு 3

அண்ணாச்சி மொக்கு 2

பூண்டு – 15

இஞ்சி 1 இன்ச்

எலுமிச்சை பழச்சாறு – 1 மேசைக்கரண்டி

செய்முறை:

1. மட்டனை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். வினிகர் சேர்த்த மசாலாக்களை அரைக்கவும்.

2. மசாலாவிற்கு அரைக்க கொடுத்துள்ள பொருட்களை அனைத்தையுமே மிக்ஸியில் போட்டு தண்ணீர் சேர்த்துகோங்க நன்றாக நைசாக விழுதாக அரைத்து கொள்ளவும்.

3.மெல்லிய துண்டுகளாக நறுக்கிய வெங்காயத்தை பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். அத்தோடு இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

4.அதில் நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து கிளறவும். அத்துடன் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.

3. இப்போது மட்டனையும் அதில் சேர்த்து மூடி வைக்கவும். மட்டன் வேகும்வரை போதுமான தண்ணீர் ஊற்றி அடிக்கடி கிளறவும்.

5.இப்போது மணக்கும் மட்டன் விண்டாலு ரெடி. வெள்ளை சாதத்துடன் தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்

Post a Comment