மட்டன் ரசம்,tamil samayal tips,new tamil samayal 2017

Loading...
Description:

என்னென்ன தேவை?

மட்டன் – 1/2 கிலோ
மஞ்சள் தூள் – 1 தேக்கரண்டி
மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
உப்பு – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
தக்காளி – 1
தேங்காய் எண்ணெய் – 1 தேக்கரண்டி
கொத்தமல்லி – சிறிதளவு

அரைக்க…

சின்ன வெங்காயம் – 4
பூண்டு – 6 பல்
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி

எப்படிச் செய்வது?

ஒரு குக்கரில் மட்டன் எடுத்து உப்பு மஞ்சள் தூள் மற்றும் சிறிது தண்ணீர் சேர்க்கவும். மட்டன் வெந்த பின் ஒரு கிண்ணத்தில் தனியாக மட்டனில் உள்ள தண்ணீரை எடுத்து வைக்கவும். ஒரு ஜாரில் வெங்காயம், பூண்டு, சீரகம், மிளகு எடுத்து மசிக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு சூடான பின் அரைத்த மசாலா சேர்த்து வதக்கி கறிவேப்பிலை மற்றும் தக்காளி போட்டு வதக்கவும். பின் உப்பு, மிளகாய்தூள், மஞ்சள் தூள் சேர்த்து தனியாக எடுத்து வைத்த மட்டன் நீர் ஊற்றி நன்றாக கலந்து கொதி வந்த உடன் கொத்தமல்லி தூவி இறக்கவும்.

Post a Comment