மட்டன் மன்சூரியன் tamil samayal

Loading...
Description:

mutton-manchurian212மட்டன் மன்சூரியன் தேவையான பொருட்கள்

இளசான ஆட்டுக்கறி            – 250 கிராம்
எண்ணெய்                                 – பொரிக்க
முட்டை                                      – 1
கார்ன்ப்ளார்                               – 1 டேபிள் ஸ்பூன்
மைதா மாவு                              – 2 டேபிள் ஸ்பூன்
சோயா சாஸ்                            – 1 டேபிள் ஸ்பூன்
மிளகு பொடி, உப்பு                 – தேவையான அளவு

 

கிரேவி செய்ய

 

இஞ்சி                                          – 1 இன்ச்
பூண்டு                                         – 10 பல்
பச்சை மிளகாய்                      – 4
சில்லி சாஸ்                             – 1/2 டீஸ்பூன்
சோயா சாஸ்                           – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு, மிளகுத்தூள்,
எண்ணெய்                                – தேவையான அளவு
கார்ன்ப்ளார்                              – 1 டேபிள் ஸ்பூன்
அஜினமோட்டோ                  – 1 சிட்டிகை
சீனி                                              – 1 டீஸ்பூன்

 

மட்டன் மன்சூரியன் செய்முறை

 

இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாயை பொடியாக வட்டமாக நறுக்கிக் கொள்ளவும். கார்ன்ப்ளாரை கால் கப் நீரில் கரைத்துக் கொள்ளவும். கறியை நன்கு கழுவி, நம்பர் 1 – ல் கொடுத்துள்ள பொருட்களையெல்லாம் கலந்து கறியில் பூசி 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் அந்த கறியை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்தெடுக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி நம்பர் 2 – ல் கொடுத்துள்ள இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் போட்டு மிதமான தீயில் வதக்கவும். பின் மற்ற எல்லாப் பொருள்களையும் போட்டு கொதிக்க விடவும். பின்னர் பொரித்து வைத்துள்ள மட்டன் துண்டங்களைப் போட்டு மிதமான தீயில் வேக விடவும். கடைசியாக கார்ன்ப்ளார் கரைத்ததை ஊற்றி கிரேவி திக்காகும் வரை விடாமல் கிளறவும். பின் ஸ்பிரிங் ஆனியன் தூவி ப்ரைட்ரைஸீடனோ அல்லது நூடுல்ஸ் உடனோ பரிமாறவும்.

Post a Comment