மட்டன் மசாலா ,Tamil Samayal,Tamil, Recipes | Samayal in Tamil | Tamil Samayal|samayal kurippu,Tamil Cooking Videos,samayal,samayal Video,Free samayal Video

Loading...
Description:

Mix half a teaspoon with only a slightly larger pieces upputtul, mancattul, crushed pepper and cumin and cook a cup of water and keep

வெங்காயம்-நான்கு
தக்காளி-இரண்டு
இஞ்சி-இரண்டு துண்டு
பூண்டு-ஆறு பற்கள்
பச்சை மிளகாய்-நான்கு
மிளகு- ஒரு தேக்கரண்டி
சீரகம்- அரைதேக்கரண்டி
மிளகாய்த்தூள்-2 தேக்கரண்டி
தனியாத்தூள்-2 தேக்கரண்டி
மஞ்சத்தூள்-1 தேக்கரண்டி
தயிர்-அரைக்கோப்பை
பட்டை-இரண்டு துண்டு
இலவங்கம்-நான்கு
ஏலக்காய்-நான்கு
கறிவேப்பிலை-இரண்டு கொத்து
உப்பு-இரண்டு தேக்கரண்டி
எண்ணெய்-தேவையான அளவு

மட்டனை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி கொண்டு அரை தேக்கரண்டி உப்புத்தூள்,மஞ்சத்தூள்,நசுக்கிய மிளகு சீரகத்தைப்போட்டு ஒரு கோப்பை  தண்ணீரை ஊற்றி வேகவைத்துக்கொள்ளவும். வெங்காயம் தக்காளி பச்சைமிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். இஞ்சி பூண்டை நசுக்கி  கொள்ளவும். வாயகன்ற பாத்திரத்தில் எண்ணெயை காயவைத்து முதலில் வாசனை பொருட்களை போட்டு வறுக்கவும். பிறகு வெங்காயத்தை போட்டு  சிவக்க வறுக்கவும். பிறகு இஞ்சி பூண்டை போட்டு நன்கு வதக்கவும். பின்னர் எல்லாத்தூளையும் போட்டு நன்கு வதக்கவும்.தொடர்ந்து பச்சை மிளகாய்  கறிவேப்பிலை தக்காளியை போட்டு நன்கு வதக்கி கொண்டு தயிரை ஊற்றி நன்கு கிளறி விடவும். அரைகோப்பை தண்ணிரை ஊற்றி மசாலாவை  நன்கு வேகவைக்கவும். மசாலா எண்ணெய் கக்கும் வரை வேகவைத்து வெந்த கறியை கொட்டி நன்கு கிளறி விடவும், அடுப்பின் அனலை குறைத்து  வைத்து பதினைந்து நிமிடம் அடுப்பில் வைத்துருந்து இறக்கி விடவும். ஒரு கொத்து கறிவேப்பிலையை மேலாக போட்டு அலங்கரித்து பரிமாறவும்

Post a Comment