மட்டன் பெப்பர் ஃப்ரை tamil samayal

Loading...
Description:

mutton-pepper-fry212மட்டன் பெப்பர் ஃப்ரை தேவையான பொருட்கள்

ஆட்டுக்கறி                                            – 250 கிராம்
பெரிய வெங்காயம்                            – 2
இஞ்சி பூண்டு பேஸ்ட்                       – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள்                                          – 2 டீஸ்பூன்
சிவப்பு மிளகாய்                                  – 2
கசகசா                                                    – 1/2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு                               – தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லி    – சிறிது

 

மட்டன் பெப்பர் ஃப்ரை செய்முறை

 

கறியை சதுர துண்டுகளாக நறுக்கவும். வெங்காயத்தை சிறியதாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு குக்கரில் எண்ணெய் விட்டு சூடாக்கி அதில் வெங்காயம், இஞ்சி பூண்டு பேஸ்ட் போட்டு வதக்கி மட்டனையும் சேர்த்து வதக்கி, உப்பு, சிறிது தண்ணீர் ஊற்றி வேக விடவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் சிவப்பு மிளகாயை கிள்ளிப் போட்டு, பின் கசகசா, கறிவேப்பிலை போட்டு தாளித்து, குக்கரில் வேக வைத்து வைத்துள்ள மட்டன் கிரேவியை வாணலியில் ஊற்றவும். தண்ணீர் நன்கு வற்றும் வரை அடுப்பைக் குறைத்து வேக விடவும். மிளகுத்தூள் 2 டீஸ்பூனை இறக்குவதற்கு 5 நிமிடம் முன்பு போட்டு தேவையான உப்பும் சேர்த்து நன்கு ஃப்ரை ஆனதும் இறக்கவும்.

Post a Comment