மட்டன் கறிsamayal

Loading...
Description:

மட்டன் கறிsamayal

அரைக் கிலோ மட்டன் எடுத்து சுத்தமாக்கி நடுத்தர துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

மூன்று, நான்கு தேக்கரண்டி எண்ணெய் எடுத்து அதில் கீழ்க் கொடுக்கப்பட்டவற்றை வதக்கவும்.

  • நடுத்தர அளவு வெங்காயம் -2 (நறுக்கியது)
  • இஞ்சி – 2’’
  • பூண்டு – 8-10 பல்
  • பச்சை மிளகாய் – 2 லிருந்து 3 (நறுக்கியது)

பின்னர் அதோடு 2 அல்லது 3 இலவங்கப்பட்டை, 8-10 கிராம்பு, 3 அல்லது 4 ஏலம் மற்றும் ஒரு தேக்கரண்டி மிளகுத்தூள் போட்டு வதக்கவும்.

பின்னர் நறுக்கி வைத்த தக்காளி, ஒரு பெரிய  உருளைக்கிழங்கு துண்டு, ஒன்று அல்லது இரண்டு காரட் துண்டு மற்றும் தேவைக்கு ஏற்ப உப்பும் சேர்த்துக் கொள்ளவும்.

திரும்பவும் வதக்கவும். இப்போது நறுக்கி வைத்த மட்டனை அதோடு சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் இரண்டு மூன்று கப் இரண்டாவது பிழிச்சல் தேங்காய் பால் ஊற்றவும்.

இறைச்சி மிருதுவாகும் வரை மூடி வைத்து வேக வைக்கவும். கிரேவி சற்று கெட்டியாக இருப்பதற்கு நீரில் கரைத்த சோள மாவு கரைசலை சேர்க்கவும்.

இரண்டு மூன்று நிமிடங்கள் வேக வைக்கவும். பின்னர் முதலாவது பிழிச்சல் தேங்காய் பாலை ஊற்றவும். சற்று சூடாகியதும் அடுப்பிலிருந்து இறக்கி விடவும்,

நெய்யில் பொரித்த சின்ன வெங்காய துண்டுகளை வைத்து அலங்கரிக்கவும்.

Post a Comment