மசாலா புட்டு

Loading...
Description:

மசாலா புட்டு

  • வறுத்த அரிசி மாவு – ஒன்றரை கப்
  • வறுத்த கோதுமை மாவு – ஒன்றரை கப்
  • தேங்காய் துருவல் – ஒரு கப்
  • கேரட் – ஒன்று (பெரியது)
  • உருளைக்கிழங்கு – ஒன்று (பெரியது)
  • பீன்ஸ் – ஒன்று
  • முட்டை – ஒன்று
  • வெங்காயம் – இரண்டு
  • தக்காளி – இரண்டு
  • பச்சை மிளகாய் – 3
  • கறிவேப்பிலை – சிறிதளவு
  • பட்டர் – ஒரு மேசைக்கரண்டி
  • மிளகாய் தூள் – ஒன்றரை தேக்கரண்டி
  • கரம் மசாலா தூள் – அரை தேக்கரண்டி
  • கடுகு – அரை தேக்கரண்டி
  • எண்ணெய் – ஒரு மேசைக்கரண்டி
  • உப்பு – தேவையான அளவு

அரிசி மற்றும் கோதுமை மாவுடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வெதுவெதுப்பான தண்ணீர் தெளித்து பிசறி தேங்காய் துருவல் சேர்த்து உதிரியாக கலந்து கொள்ளவும்.

பிறகு மாவை புட்டுக் குழல் (அல்லது) இட்லிப் பானையில் வேக வைத்து உதிர்த்து வைக்கவும்.

கேரட், பீன்ஸ் மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி ஆவியில் வேக வைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து, வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதங்கியதும், தக்காளி சேர்த்து குழைய வதக்கி தூள் வகைகள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

தூள் வகைகளின் பச்சை வாசனை போனதும் முட்டையை உடைத்து ஊற்றி வேகவிடவும்.

முட்டை அரை பதம் வெந்ததும், வேக வைத்த காய்கறிகள் மற்றும் பட்டர் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்.

அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து வந்ததும் வேக வைத்த புட்டைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

சுவையான மசாலா புட்டு தயார்.

Post a Comment