மக்கன்பேடா

Loading...
Description:

13428624_1035089063204816_6767793872072576812_n

தேவையான பொருட்கள் :
மைதா 1 கப்
சக்கரை இல்லாத கோவா 3/4 கப்
தயிர் 1/4 கப்
நெய் 1 மேஜைக்கரண்டி
டால்டா 1 மேஜைக்கரண்டி
சோடா உப்பு 1/2 தேக்கரண்டி
பாதாம் + முந்திரி பருப்பு + பிஸ்தா + வெள்ளரி விதைகள் பொடியாக நறுக்கியது 15
காய்ந்த திராட்சை 15
வேர்கடலை எண்ணெய் – பொறிப்பதற்கு தேவையான அளவு

சர்க்கரை பாகு
சர்க்கரை 3 1/2 கப்
தண்ணீர் 3 1/2 கப்
வெண்ணிலா எசன்ஸ் 3 துளிகள்

செய்முறை

1. ஒரு பாத்திரத்தில் மைதா, கோவா , நெய், டால்டா , தயிர், சோடா உப்பு அனைத்தையும் ஒன்றாக சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

2. இந்த கலவையை நன்றாக15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.

3. இப்பொழுது சர்க்கரை பாகை உற்பத்தி செய்ய வேண்டும். அகன்ற பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் சர்க்கரை போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும்.

4. சர்க்கரை கொதிக்க ஆரம்பித்த பின் தீயை சிறிது குறைத்து வைக்கவும். இதில் சிறிது வெண்ணிலா எசன்ஸ் சேர்க்கவும்.

5. இப்பொழுது சர்க்கரை பாகு தயார்.

6. இப்பொழுது மாவு கலவையை நன்றாக பிசைந்து மாவு மிருதுவாக உள்ளதா என்று சரி பார்த்து கொள்ளவும்.

7. பிறகு மாவை சிறு எலுமிச்சம்பழ அளவு உருண்டைகளை பிடித்து கொள்ளவும்.

8. இப்பொழுது உருண்டைகளை கொஞ்சமாக தட்டி அதில் சிறிது பருப்பு கலவையும் மற்றும் திராச்சையையும் உள்ளே வைக்கவும்.

9. பிறகென்ன மாவு உருண்டையை நன்றாக மறுபடியும் உருட்டி கொஞ்சம் கைகளால் அழுத்தம் கொடுக்கவேண்டும். பார்ப்பதற்கு பாதுஷா போல் இருக்கும்.

10. வடைச்சட்டியை அடுப்புல வைத்து அதில் வேர்கடலை எண்ணெய் ஊற்றி கொதிக்க வைக்கவும்.

11. பின்னர் அதில் மாவு உருண்டைகளை காய்ந்த எண்ணெய்ல போட்டு நன்றாக பொன்னிறமாக சுட்டு எடுக்கவும்.

12. சுட்டு வைத்துள்ள பேடா களை சர்க்கரை பாகுல் இடவும். இந்த பேடா சுமாராக 30 நிமிடம் மணி நேரம் ஊற வைக்கவும். பிறகு பாகில் இருந்து எடுத்து அகன்ற பாத்திரத்தில் எடுத்து வைக்கவும்.

13. பிறகென்ன பருப்பு வகைகளை தூவி பரிமாறவும்.

குறிப்பு

1. பருப்பு வகைகளை , திராச்சையையும் சிறிது நெய்யில் வறுத்து எடுத்து வைக்கவும்

Post a Comment