ப்ரெய்ஸ்ட் மட்டன் பால்ஸ்

Loading...
Description:

breast-mutton-balls212ரெய்ஸ்ட் மட்டன் பால்ஸ் தேவையான பொருட்கள்

கொத்திய கறி                        – 200 கிராம்
வெங்காயம்                           – 2
இஞ்சிச் சாறு                         – 1/4 டீஸ்பூன்
சோயா சாஸ்                        – 21/2 டேபிள் ஸ்பூன்
வினிகர்                                   – 1/2 டேபிள் ஸ்பூன்
முட்டை                                  – 1
அஜினமோட்டோ               – 1 சிட்டிகை
கார்ன்ப்ளார்                           – 1 டேபிள் ஸ்பூன்
உப்பு, எண்ணெய்                 – தேவையான அளவு
சீனி                                           – 1 டீஸ்பூன்
முட்டைகோஸ்                  – 250 கிராம்

 

ப்ரெய்ஸ்ட் மட்டன் பால்ஸ் செய்முறை

 

வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முட்டைகோஸை பெரிய சதுரங்களாக நறுக்கிக் கொள்ளவும். கொத்துக்கறியுடன் வெங்காயம், இஞ்சிச்சாறு, 1 டேபிள் ஸ்பூன் சோயா சாஸ், வினிகர், உப்பு, அஜினமோட்டோ சேர்த்துப் பிசைந்து கொள்ளவும். இதனை எலுமிச்சம் பழ அளவு உருண்டைகளாக உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் சூடாக்கி அதில் முட்டை கோஸைப் போட்டு நன்கு வதக்கவும். முட்டையை நன்கு அடித்துக் கொள்ளவும். கார்ன் ப்ளாரை கட்டிகள் இல்லாமல் கரைத்துக் கொள்ளவும். கோஸ் வதங்கியதும் மீதமுள்ள சோயா சாஸ், சீனி, அஜினமோட்டோ கார்ன்ப்ளார், முட்டை அடித்தது எல்லாவற்றையும் சேர்த்து 1/4 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும். பின் பொரித்து வைத்துள்ள பால்ஸையும் போட்டு அடுப்பைக் குறைத்து அரைமணி நேரம் வேக விட்டு இறக்கவும்.

Post a Comment