ப்ரூட் சாலட்,கோடைகாலத்தில் ஒரு கூல் ப்ரூட் சாலட் !,பழங்கள்

Loading...
Description:

பழங்கள் மற்றுமகோடை தொடங்குவதற்கு முன்பே  தற்போது வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தற்போது இருக்கும் வெப்பத்தையே சமாளிக்க முடியவில்லை.

இந்த மாதங்களில் அதிகமாகக் கிடைக்கும் மாம்பழம், தர்பூசணி, கிர்ணிப் பழம், முலாம்பழம், நுங்கு இவைகளைக் கொண்டு எளிதான சுவையான பழக் கலவை தயாரிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

தோல் சீவி சிகப்பான பகுதியை துண்டுகளாக்கிய தர்பூசணி – 1 கப்

கிர்ணிப்பழம் – 1 கப்

முலாம் பழம் – 1 கப்

இனிப்பான நார் இல்லாத மாம்பழம் – 1 கப்

இளசாக உள்ள நுங்கு துண்டுகள் – 1 கப்

தேன் – 1 டேபிள் ஸ்பூன்

தேவையானால் கஸ்டர்டு பவுடர் – 1 டேபிள் ஸ்பூன்

பால் – 1 கப்

(இது தவிர வாழைப்பழத் துண்டுகள் – 1 கப், கொட்டையில்லாத திராட்சை – 1 கப், பப்பாளி (இனிப்பானது) துண்டுகள் – 1 கப், காஸ் மீது வைத்து அரை நிமிடம் சுட்டு, தோல் நீக்கி, குறுக்கே வெட்டி, விதைகள் நீக்கி துண்டுகள் போட்ட இனிப்பான பெங்களூர் தக்காளி – 1 கப் என்று எந்தப் பழம் சீப்பாக கிடைக்கிறதோ, அதை எடுத்துக்கொள்ளலாம்.)

செய்முறை:

* எல்லாவற்றையும் சேர்த்து நறுக்கி ப்ரிட்ஜ்ஜில் ட்ரேயில் வைக்கவும்.

* பால் சூடாக்கி, குளிர்ந்த பால் கரைத்த கஸ்டர்டு பவுடரை அதில் ஊற்றி அடி பிடிக்காமல் கொதித்ததும் நன்கு ஸ்பூனால் குழைத்து ஆறியதும் தேன், வெனிலா எசன்ஸ் சேர்த்து ப்ரிட்ஜ்ஜில் வைக்கவும்.

* குழந்தைகளுக்குத் தேவையான போது பழக் கலவையின் மீது – 1 ஸ்பூன் கஸ்டர்ட் போட்டு கிண்ணத்தில் கொடுத்தால் எல்லா பழங்களையும் சாப்பிடுவார்கள்.

* சுமார் – 15 குழந்தைகள் பங்குபெறும், பிறந்தநாள் விழா அல்லது கெட் டு கெதர் பார்ட்டிக்கு – 2 மாம்பழம், – 1 கிர்ணிப்பழம், – 1 முலாம் பழம், – 4 தக்காளி, 100 – கிராம் திராட்சை, – 10 நுங்கு போதும். குறைந்த செலவில் சத்தான சுவையான விலை குறைவான சாலட் ரெடி. தோல் சீவிக் கொடுத்து விட்டால் அவர்களே தயாரித்து விடுவார்கள்.

Post a Comment