ப்ரட் உப்புமா / Bread Upma

Loading...
Description:

IMG_2517

ப்ரட் உப்மா அவசர சமயத்தில் கைகொடுக்கும் ஆபத்பாண்டவன். ஆனால் அவசர அவசரமாக செய்தாலும் டேஸ்ட் குறையாது. இதை நான் என் கணவரிடம் தான் கத்துக்கிட்டேன். கல்யாணத்துக்கு முன்னாடி எனக்கு இப்படி ப்ரட்ல உப்புமா செய்யலாம்னு தெரியாது. ஆனா இப்போ இது என்னோட பேவரெட் ரெசிபி.இது எனக்கு பிடிச்ச ரெசிபிங்கரதுனால வாரம் ஒருமுறை கண்டிப்பா செய்வேன். இன்னைக்கு நான் காய்கறி எதுவும் சேர்க்காமல் வெங்காயம்,தக்காளி மட்டும் யூஸ் பண்ணி அவசர சமயத்துல எப்படி செய்யலாம்னு  சொல்லி இருக்கேன். ரிலேக்ஸா  இருக்கும் போது செய்யறதா இருந்தா உங்களுக்கு பிடிச்ச காய்கறிகளை ஆவியில் வேகவச்சு சேர்த்துகுங்க. நான் whole wheat bread ல செய்தேன். நீங்க உங்க விருப்பமான அதாவது வைத் ப்ரட் (அ) வீட் ப்ரட் எதுல வேண்டுமானாலும் செய்யலாம். ஆனா சால்ட் ப்ரட்ல தான் செய்யணும்.  


தேவையானவை:

 
ப்ரட் துண்டுகள் – 10 
வெங்காயம் – 2
தக்காளி – 2
பச்சை மிளகாய் – 2
கருவேப்பிலை – 1 கொத்து 
கொத்தமல்லி – ஒரு கைப்பிடி  
இஞ்சி பூண்டு விழுது -1 டீஸ்பூன் 
கடுகு – 1/2 tsp 
கடலை பருப்பு – 1/2 tsp 
உளுத்தம் பருப்பு -1/2 tsp 
பிரியாணி இலை – 2
பட்டை – 1இன்ச் 
கிராம்பு – 4 
மஞ்சள் தூள் – 1/2 tsp 
மிளகாய் தூள் – 1/2 tsp 
தனியாத்தூள் -1/2 tsp
கரம் மசாலா – 1/2 tsp 
உப்பு – ருசிகேற்ப 
எண்ணெய் –  2டேபுள்ஸ்பூன்  (அ) தேவையான அளவு
தக்காளி கெட்சப் – 1 டேபுள்ஸ்பூன் 
 
செய்முறை : 
 
 
  • பேனில் எண்ணெய் உற்றி சூடானதும், கடுகு சேர்த்து கடுகு வெடித்ததும்,கடலை பருப்பு,உளுத்தம் பருப்பு, பட்டை, கிராம்பு,பிரியாணி இலை சேர்த்து தாளிக்கணும்.
  • பருப்பு சிவந்ததும் இஞ்சி பூண்டு விழுது பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போற வரைக்கும் ப்ரை பண்ணுங்க.
  • பச்சை வாசனை போனதும் வெங்காயம் சேர்க்கணும்.
  • வெங்காயம் வதங்கினதும் தக்காளி,கருவேப்பிலை சேர்த்து வதக்கணும்.
  • தக்காளியை 2,3 நிமஷம் வதக்கிட்டு மசாலா பொடிகளை சேர்க்கணும்.
  • தக்காளி நல்லா மசிய வெந்த பிறகு கெட்சப் சேர்க்கணும்.
  • தேவையான அளவு உப்பு (கெட்ச்சப்பிலும் உப்பு இருக்கும் உப்பு பார்த்து சேர்க்கவும்.) சேர்த்து உதிர்த்த ப்ரட் துகள்களை சேர்த்து வதக்கணும்.


  • ட்ரையாக இருந்தா கொஞ்சமா என்னை விட்டுக்குங்க.நல்லா கலந்த பிறகு கொத்தமல்லி இல்லை தூவி கலந்து பரிமாறுங்க!
  • இதோ சுவையான ப்ரட் உப்புமா ரெடி …..
ப்ரட் உப்புமா 

Post a Comment