பைனாப்பிள் கேக்

Loading...
Description:

Upside-down-pineapple-cake-GnC

தேவையானவை​
பைனாப்பிள் – 4 துண்டுகள்
மைதா – ஒன்றரை கப் (200 மி.லி கப்)
கன்டண்ஸ்டு மில்க் – ஒரு டின் (400 கிராம்)
வெண்ணெய் – 100 கிராம் (Unsalted)
பேக்கிங் பவுடர் – ஒரு தேக்கரண்டி
பேக்கிங் சோடா – அரை தேக்கரண்டி
பைனாப்பிள் எசன்ஸ் – அரை தேக்கரண்டி
சர்க்கரை – 8 தேக்கரண்டி
சோடா – முக்கால் கப் (Carbonated water)
கலர் – சிறிது (விரும்பினால்)

 

செய்முறை
மைதா, பேக்கிங் பவுடர் மற்றும் பேக்கிங் சோடாவை கலந்து சலித்து வைக்கவும். அவனை 180 C’ல் முற்சூடு செய்யவும்.

வெண்ணெயை உருக்கி ஆற வைக்கவும்.

பேக்கிங் ட்ரேயில் சிறிது வெண்ணெய் தடவி பைனாப்பிள் துண்டுகளை விருப்பம் போல் அடுக்கவும்.

சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் போட்டு அடுப்பில் வைத்து ப்ரவுன் கலராக கேரமல் ஆகும் வரை கிளறவும்.

அதை பைனாப்பிள் துண்டுகள் மேல் பரவலாக ஊற்றவும்.

பிறகு ரூம் டெம்பரேச்சரில் உள்ள வெண்ணெயில் கன்டண்ஸ்டு மில்க்கை ஊற்றி கலக்கவும்.

இதில் கலர் கலந்து, சிறிது மைதா கலவை, சிறிது சோடா சேர்த்து கலக்கவும். மாற்றி மாற்றி சிறிது மைதா, சிறிது சோடா என முழுவதும் கலந்து

கொள்ளவும். கடைசியாக பைனாப்பிள் எசன்ஸ் சேர்த்து கொள்ளவும்.

இந்த கலவையை கேக் ட்ரேயில் ஊற்றி முற்சூடு செய்த அவனில் பேக் செய்யவும்.

30 – 40 நிமிடங்கள் வரை எடுக்கும். அவனையும், பயன்படுத்தும் கேக் ட்ரேயின் அளவை வைத்து நேரம் மாறுபடும். நடுப்பகுதியில் விட்டு எடுக்கும்

கத்தி அல்லது டூத்பிக் சுத்தமாக கலவை ஒட்டாமல் வெளியே வந்தால் கேக் தயார்.

சுவையான பைனாப்பிள் கேக் தயார். இது மிகவும் சாஃப்ட்டாக மிதமான இனிப்போடு இருக்கும்

Post a Comment