பெரும்பயறு சுண்டல்,Tamil Samayal,Tamil, Recipes | Samayal in Tamil | Tamil Samayal|samayal kurippu,Tamil Cooking Videos,samayal,samayal Video,Free samayal Video

Loading...
Description:

பெரும்பயறு சுண்டல்பெரும்பயறு சுண்டல்
தேவையானப் பொருள்கள்:

பெரும்பயறு-மூன்று கையளவு
சின்ன வெங்காயம்-2
கொத்துமல்லி இலை-ஒரு கொத்து
உப்பு-தேவையான அளவு

தாளிக்க:

நல்லெண்ணெய்-1/2 டீஸ்பூன்
கடுகு உளுந்து
காய்ந்த மிளகாய்-1
பெருங்காயம்
கறிவேப்பிலை

செய்முறை:

* சின்ன வெங்காயம், கொத்தமல்லி தழை, பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

* பெரும்பயிறை ஊற வைக்க வேண்டுமென்பதில்லை.தேவையானப் பயறை ஒரு குக்கரில் அல்லது ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அது வேகும் அளவு தண்ணீர் ஊற்றி,உப்பு போட்டு வேக வைக்கவும். நன்றாக வெந்ததும் (குழைய விட‌ வேண்டாம்) தண்ணீரை வடித்துவிடவும்.

* ஒரு தாளிக்கும் கரண்டியில் எண்ணெய் விட்டு தாளிக்கக் கொடுத்துள்ளப் பொருள்களை ஒன்றன்பின் ஒன்றாகத் தாளித்து சுண்டலில் கொட்டிக் கலக்கவும்.

* தாளிப்பு முடிந்ததும் கொத்துமல்லி இலை,சின்ன வெங்காயம் இவற்றைப் பொடியாக நறுக்கிக் கலந்து பரிமாறவும்.

Post a Comment