பெண்களுக்கு புதிய பேஷன் தரும் புதிய உற்சாகம்

Loading...
Description:

201611020747286622_women-bring-new-exciting-to-the-new-fashion_secvpf-gif

மனித மனம் எப்போதுமே புதுப்புது விஷயங்களில் கவுரப்படுவது தான். புதிதாய் ஒன்றை பார்க்க, சுவைக்க அனுபவிக்க, செய்ய விருப்பம் இல்லாதவர்களே இருக்க மாட்டார்கள். அதிலும் குறிப்பாக இளம் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு புதிய பேஷன் தரும் உற்சாகமே அலாதி தான். இந்த வருடம் அப்படி என்ன புதிய பேஷன் வந்துள்ளது.

இந்த வருடம் பியூஷன் ஆடைகள், வெஸ்டர்ன் மற்றும் இந்தியன் ஸ்டைலை இணைத்து பியூஷன் டிசைனாக வந்துள்ள காக்ரா வித்டாப் அதிகளவில் காணப்படுகிறது. காக்ராவுடன் அதிக வேலைப்பாடுகள் கொண்ட சோளி அணிந்து கொள்ளலாம். அல்லது வெஸ்டர்ன் ஸ்டைல் டாப் அணியலாம். அல்லது புராதன எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் கொண்ட குர்தியையும் அணிந்து கொள்ளவும். ஒரே காக்ராவை மூன்று விதமாகவும் உடுத்திக் கொள்ளலாம். அதேபோல் காக்ரா ஒரு நிறத்திலும் சோளி ஒரு நிறத்திலும் துப்பட்டா வேறொரு நிறத்திலும் என்று மூன்று அழகிய வெளிர் நிறங்களில் வரும் காக்ராக்கள் ரம்மியமான தோற்றத்தை கொடுப்பதாக இருக்கிறது.

இன்றைய லேட்டஸ்ட் பேஷனில் கவுன் வகைகளும் வந்துள்ளன. போன வருடம் பேஷனாக பால்கவுன் இருந்தது நினைவிருக்கலாம். இந்த வருடம் ப்ளோர் லென்த் கவுன் என்ற தரை வரையில் நீண்டிருக்கும் கவுன் மிகப்பிரபலமாக காணப்படுகிறது.

புடவைகளைப் பொருத்தவரையில் இளம் பெண்களுக்கு மெல்லிய ஜார்ஜட், பாலி ஷிபான், சில்க் காட்டன், செமி டஸ்ஸர் போன்ற புடவைகளில் அதிகளவில் எம்ராய்டரி வேலைப்பாடுகள் கொண்ட புடவைகள் வந்துள்ளன. சந்தேரி காட்டன் மற்றும் சந்தேரி சில்க் புடவைகள் மற்றும் சுடிதார்களில் அழகிய எம்ப்ராய்டரி வேலைப்பாடுகள் கொண்ட துணிகள் கூட இந்த பண்டிகைக் கால பேஷனாக வந்துள்ளன.

பேஷன் துணிகளுக்கு மட்டுமின்றி அழகுசாதன பொருட்களுக்கும் மாறி மாறி வரும். தலைமுடியை இயற்கையாய் படரவிட்டு ஓரிரு முடிக்கற்றைகளை மட்டும் முகத்தில் தவழவிட்டு, லேசான முக அலங்காரம் மற்றும் உதட்டுச்சாயத்துடன், இந்த நகைகளை அணியவே இன்றைய இளம் பெண்கள் விரும்புகின்றனர்.

நீளமான ஸ்கர்ட்டை வெளிர் நிறங்களில், ஜரிகை வேலைப்பாடுகள் இல்லாமல் அணிந்து அதன் மேலே டெனிம் துணிகளினால் ஆன டாப்கள் அணிவதும் கல்லூரிப்பெண்களிடம் ரசனையாக இருக்கிறது. பெலேஜோ என்றழைக்கப்படும் தொளதொள பேண்ட் இன்றைய கடைகளில் பல டிசைன்களில், வண்ணங்களில் கிடைக்கின்றன. காம்போ சலுகையாக இந்த பேண்ட்களை பல வித வண்ணங்களில் வாங்கி வெவ்வேறு டாப்களுடன் அணிவதும் இன்றைய இளம் பெண்களின் தேர்வாக இருக்கிறது.

Post a Comment