பெண்களுக்கு தேவையில்லாத இடங்களில் முடி வளர காரணம்

Loading...
Description:

muuu

14 வயதை தாண்டும்போது இரண்டாவது பாலின அடையாளங்களாகிய உடலில் முடி வளர்வது என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் இயற்கை. ஆனால் பருவ வயதைதாண்டிய பிறகு பெண்களுக்கு தேவையில்லாத இடங்களில் வளரக்கூடிய முடி வளரும் தொல்லை இப்போது அதிகரித்து கொண்டிருக்கிறது.

 

பெண்களுக்கு மாதவிலக்கு நிரந்தரமாக நிற்கும் மெனோபாஸ் தருவாயில் (கிட்டத்தட்ட 45 வயதில்) தலைமுடி அதிமாக கொட்டுகிறது. தலையில் குறிப்பிட்ட இடத்தில் மட்டும் முடி இல்லாமல் போகும் நிலை உருவாகிறது. இந்த பருவத்தில் பெண்களின் உடலிலுள்ள ஹார்மோன்களின் சீரற்றநிலையால் உடலில் தேவையற்ற இடங்களில் முடி நிறைய வளர்வதும் உண்டு. ஈஸ்ரோஜன், புரோஜெஸ்ட்ரான் ஆகிய இரண்டும் பெண்களின் பாலின ஹார்மோன்கள்.

இந்த இரண்டு ஹார்மோன்களும் தான் பெண் பருவமடையும் காலத்தில் இரண்டாவது பாலின அடையாளங்கள் பெண்களின் உடலில் உருவாகுவதற்கு முக்கிய காரணங்களாக இருக்கின்றன. ஆண்களுக்கு ஆன்ட்ரோஜன் ஹார்மோன் குறைந்து விட்டால் அவர்களுக்கு பெண்களுக்குண்டான அங்க அமைப்புகள் அடையாளங்கள் உடலில் கொஞ்சம் கொஞ்சமாக தோன்ற ஆரம்பிக்கும். பெண்களுக்கும் ஆன்ட்ரோஜன் ஹார்மோன் சிறுநீரக மேற்பட்டை சுரப்பியிலும், சுரப்பியிலும், சினைப்பையிலும் உற்பத்தியாகிறது.

ஆனால் அது குறைந்த அளவே சுரக்கும். மாறாக நிறைய சுரந்து விட்டால் பெண்ணின் உடலில் ஆண்மைத்தன்மை அரங்கேறத்தொடங்கும். நீங்கஒரு பெண்ணாக 16 வயதுக்கு மேலுள்ளவராக இருந்தால் உங்களுக்கு ஆண்களுக்கு வளர்வது போல் அதிகப்படியான முடி, உதட்டின் மேலே (மீசை), தாடை, மார்பு, வயிறு, முதுகு, முதலிய இடங்களில் வளர்ந்தால் அதை ஹிர்சூடிஸம் என்பர்.

இது ஒரு நோயல்ல. ஹார்மோன்களின் சீரற்ற தன்மையாலும், மருந்து மாத்திரைகளின் பக்க விளைவுகளினாலும், மரபணுக்களின் தூண்டுதலினாலும், ஆண்களை போல் பெண்களுக்கும் அதிகப்படியாக முடி வளரும் ஹிர்சூடிஸம் ஏற்படுகிறது. சில குடும்பங்களில் பெண்களுக்கு மரபுரீதியாக இது தோன்றிக்கொண்டிருக்கிறது.

ஆண் ஹார்மோனாகிய ஆன்ட்ரோஜன், பெண்ணின் உடலில் அதிகமாக சுரக்கும் போது ஹிர்சூடிஸம் மற்றும் முகப்பரு, கனத்த ஆண்குரல், மிகச்சிறிய மார்பகங்கள் முதலிய ஏதாவதொன்றும் ஏற்படக்கூடும். ஹிர்சூடிஸம் உள்ள பெண்களுக்கு உடல் தசைகள் பெரிதாக இருக்கும். ஆனால் இது நோய் அல்ல. ஹார்மோன்களின் சீரற்றத்தன்மையால் ஏற்படும் குறையே..

Post a Comment