பெண்களின் வயிற்றுப்பகுதியை குறைக்கும் பயிற்சி

Loading...
Description:

பெண்களின் வயிற்றுப்பகுதியை குறைக்கும் பயிற்சிவீட்டில் இருக்கும் பெண்கள் தற்போது உடல் பருமனால் பெரிதும் அவதிப்படுகின்றனர். மேலும் இவர்களுக்கு ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்யவும் நேரம் கிடைப்பதில்லை.

இவர்களுக்கு என்று சில பயிற்சிகள் உள்ளன. அவற்றுள் இந்த பயிற்சி விரைவில் நல்ல பலனை தரக்கூடியது. இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் கால்களை நீட்டி மல்லாந்து படுத்துக் கொள்ளவும்.

வலது காலை முட்டிவரை மடக்கி வயிற்றுக்கு நேராக கொண்டு வந்து கைகளால் கால் முட்டியை பிடித்து கொள்ளவும். பின்னர் இடது கையை தரையில் ஊன்றவும். வலது காலை முட்டியை (படத்தில் உள்ளபடி) தரையில் பதிய வைக்கவும்.

இடது கையால்  கால் முட்டியை அழுத்தவும். இந்த நிலையில் உடலையும், தலையையும் இடது பக்கமாக திருப்ப வேண்டும். (படத்தில் உள்ளபடி)சில விநாடிகள் இந்த நிலையில் இருந்த பின்னர் பழைய நிலைக்கு வரவும்.

இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இந்த பயிற்சி செய்ய சற்று கடினமாக இருக்கும். இவ்வாறு வலது பக்கம் செய்த பின்னர் இடது பக்கம் என்று மாறி மாறி செய்ய வேண்டும்.

Post a Comment