பெண்களின் சரும கோளாறுக்கு மொபைல் போன் காரணமா? ஆராய்ச்சியில் திடுக் தகவல்

Loading...
Description:

பெண்களின் சரும கோளாறுக்கு மொபைல் போன் காரணமா? ஆராய்ச்சியில் திடுக் தகவல்

உடல்நல பாதுகாப்பில் முக்கிய பாங்கு வகிப்பது சருமம். மிக மென்மையாக இருக்கும் சருமத்தின் ஆயுள் மற்றும் ஆரோக்கியத்தை பாழாக்குவதில் மொபைல் போனுக்கும் பெரும் பங்கிருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

முன்னர் ஆண்களே அதிகமாக மொபைல் போன் பயன்படுத்துபவர்களாக இருந்த நிலையில், தற்போது அவர்களுக்கு ஈடாக பெண்களிடமும் மொபைல் போன் பயன்பாடு அதிகரித்துள்ளது.

மொபைல்போனில் வெளியேறும் வெப்பத்தினால் முகத்தில் கரும்புள்ளிகள் உண்டாவதுடன், முகத்தோடு அதிக நேரம் ஒட்டி வைத்து பேசுவதால் அதிகப்படியான பருக்கள் உண்டாகிறது. இதனால், தூக்கமின்மை பிரச்சனை ஏற்பட்டு ஹார்மோன்கள் பாதிக்கப்படுகிறது.

மாதவிடாய் காலங்களில் ஆஸ்ட்ரோஜன் உற்பத்தியில் ஏற்படும் மாற்றமானது தோலிலும் உண்டாகிறது. ஆஸ்ட்ரோஜனின் அளவானது குறையும் போது புதிய தோல் செல்கள் உற்பத்தி குறைவதால் தோல் கடினமடைகிறது.

அதிக நேரம் மொபைல் போனை காதில் வைத்து பேசுவதால் காதின் ஓரங்களில் ஏற்படும் உராய்வு காரணமாக அரிப்பு ஏற்பட்டு அந்த இடமானது கருப்பாக மாறிவிடுகிறது.

இதனால் சருமப்பகுதிகளில் போதுமான தண்ணீர், உறுதி தன்மை மற்றும் மீள்தன்மை இல்லாமல் தோலானது மிகவும் கடினமாகிறது.

தினசரி நாம் பயன்படுத்தும் போனில் இலட்சக்கணக்கான பாக்டீரியாக்கள் ஒட்டி கொண்டு உள்ளன. இதனை நாம் பயன்படுத்தும்போது அலர்ஜி போன்ற தொற்று வியாதிகளும் உண்டாகிறது.

Post a Comment