பூரி மசாலா / Poori Masala

Loading...
Description:

Poori-Masala

தேவையான பொருட்கள் :

 

உருளை கிழங்கு                    : 5 Nos (வேக வைக்கவும்)

வெங்காயம்                              : 2 Nos (பொடியாக நறுக்கவும்)

பச்சை மிளகாய்                      : 3 to 4 Nos. (கீறிக் கொள்ளவும்)

இஞ்சி                                           : 1 இன்ச் (பொடியாக நறுக்கவும்)

கருவேப்பிலை                        : 2 ஆர்க்கு

பச்சை கொத்தமல்லி           : சிறிது

கடுகு                                             : 1 டி ஸ்பூன்

உப்பு                                              : ருசிகேற்ப

மஞ்சள் பொடி                          : 1/2 டி ஸ்பூன்

எண்ணை                                   : 2 டேபிள் ஸ்பூன்

தண்ணீர்                                     : 1/2 டம்ளர்

 

செய்முறை :

 

  • வேகவைத்த உருளை கிழங்கை தோல் உரித்து கொள்ளவும்.
  • ஒரு வாணலியில் எண்ணை விட்டு அடுப்பில் வைக்கவும். எண்ணை காய்ந்ததும் கடுகு போடவும்.
  • கடுகு பொரிந்தவுடன் பச்சை மிளகாய், நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  • மஞ்சள் பொடி, இஞ்சி சேர்த்து வதக்கவும். அரை டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு சேர்க்கவும்.
  • தண்ணீர் கொதி வந்தவுடன் வெந்த உருளை கிழங்கை கையால் மசித்து அதில் போடவும்.
  • எல்லாம் சேர்ந்து வரும் பொழுது இறக்கி கருவெப்பிலையைக் கிள்ளி போடவும்.

Post a Comment