பீட்ரூட் தினை இனிப்பு பணியாரம்

Loading...
Description:

14203231_1082231621823893_3564155478809436655_n

து குழந்தைகள் விரும்பி உண்ணும் சிறுதானிய உணவு வகை.

தேவையான பொருட்கள்
பீட்ரூட் 70 கிராம் ( துருவி கொள்ளவும் )
அரிசி மாவு 1 மேஜைக்கரண்டி
தினை 1/2 கப்
ஆப்ப சோடா 1 தேக்கரண்டி
பொடித்த பனை வெல்லம் 8 மேஜைக்கரண்டி
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
தண்ணீர் 1 மேஜைக்கரண்டி
பசு நெய் தேவையான அளவு

செய்முறை
1. தினை அரிசியை தண்ணீரில் 3 மணிநேரம் ஊறவைத்து கொள்ளவும். பிறகு மிக்ஸியில் தண்ணீர் சேர்காமல் அரைத்து கொள்ளவும்.

2. பிறகு மிக்ஸியில் துருவி வைத்துள்ள பீட்ரூட்டை சேர்த்து நன்றாக நைசாக விழுதாக அரைத்து கொள்ளவும்.

3. இப்பொழுது அரைத்து வைத்துள்ள மாவில் அரிசி மாவு, சோடா உப்பு, ஏலக்காய் தூள் மற்றும் பொடித்து வைத்துள்ள பனை வெல்லம் அனைத்தையும் சேர்த்து ஒன்றாக நன்றாக கலந்து கொள்ளவும்.

4. அதில் 1 மேஜைக்கரண்டி தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு நன்றாக கலக்கி வைத்து கொள்ளவும்.

5. இப்பொழுது பணியார கல்லை அடுப்பில் வைத்து அதில் ஒரு தேக்கரண்டி அளவு நெய்யை ஒவ்வொரு பணியார குழியில் ஊற்றவும்.

6. நெய் காய்ந்ததும் அதில் 1 மேஜைக்கரண்டி அளவு மாவை பணியார குழியில் ஊற்றவும். குழியில் அரைபகுதி மட்டும் மாவை கொண்டு நிரப்பவும்.

7. 3 நிமிடங்களுக்கு பிறகு பணியாரத்தை திருப்பவும் மறுபடியும் 2 நிமிடங்கள் வேக விடவும். பிறகென்ன சுடச்சுட சுவையான பீட்ரூட் பணியாரத்தை எடுத்து பரிமாறவும்.

Post a Comment