பீட்சா சாண்ட்விச்,Tamil Samayal,Tamil Recipes | Samayal in Tamil | Tamil Samayal|samayal kurippu,Tamil Cooking Videos,samayal,samayal Video,Free samayal Video

Loading...
Description:

Pizza Sandwich - Cooking Recipes in Tamil

தேவையானவை:

பீட்சா நான் (பீட்சா பேஸ்) – 4
வெங்காயம், குடமிளகாய், காளான், பேபிகார்ன் (எல்லாம் பொடியாக நறுக்கியது) – தலா கால் கப்
பீட்சா சாஸ் அல்லது தக்காளி சாஸ் – தேவைக்கேற்ப
உப்பு – தேவைக்கேற்ப
சிவப்பு மிளகாய் தூள் – சிறிது
ஒரிகானோ எனப்படும் இத்தாலிய மூலிகை – 2 சிட்டிகை
மோசரில்லா சிஸ் – 50 கிராம் (இவை டிபார்ட்மென்டல் ஸ்டோர்களில் கிடைக்கும்).
வெண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்
எண்ணெய் – வதக்கத் தேவையான அளவு

செய்முறை:

கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், குடமிளகாய், காளான், பேபிகார்ன் சேர்த்து வதக்கவும். கடைசியில் மிளகாய் தூள், ஒரிகானோ சேர்த்து இறக்கவும். பீட்சா நானை மத்தியில் இரண்டாக வெட்டவும். உள்ளேயும், வெளியேயும் வெண்ணெய் தடவவும். பீட்சா சாஸ் அல்லது தக்காளி சாஸை உள்ளே தடவி, தேவையான காய்கறி வதக்கலை அதன்மீது பரவலாகத் தூவவும். துருவிய சீஸை அதன் மேல் வைத்து, மேல்பாகத்தை ப்ரெட் சான்ட்விச் போல மூடவும். முன்பே சூடாக்கப்பட்ட சான்ட்விச் டோஸ்டரின் மத்தியில் வைத்து நன்றாக டோஸ்ட் செய்யவும்.

டோஸ்டர் இல்லாதவர்கள், தோசைக்கல் உபயோகித்தும் இதைச் செய்யலாம். தோசைக்கல்லில் பீட்சாவின் அடிப்பாகத்தை வைத்து, அதன் மேல் ஒரு தட்டு போட்டு மூடி, கனமான பொருளை வைக்கவும். வெந்ததும் திருப்பி போட்டு மூடவும். இரண்டு பக்கமும் நன்கு வெந்ததும், சூடாகப் பரிமாறவும்.

Post a Comment