பிராமணசமையல்-ஆலு புஜியா

Loading...
Description:

பிராமணசமையல்-ஆலு புஜியா

தேவையான பொருட்கள்

உருளைக் கிழங்கு – 2
கடலை மாவு – 200 கிராம்
உடைத்த கடலை அல்லது காராமணி – 100 கிராம்
பெருங்காயத்தூள் – சிறிது
மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
உப்பு – தேவைக்கு
சாட் மசாலாத்தூள் – சிறிது
எண்ணைய் – பொரிக்க

 

தயாரிக்கும் முறை

உருளைக் கிழங்கை வேகவைத்து மிக்ஸியில் அரைக்கவும்.

பின்னர் உடைத்த கடலை அல்லது வறுத்த காராமணியை மிக்ஸியில் நைசாக பொடிக்கவும்.

பின் மசித்த உருளைக் கிழங்கு, கடலை மாவு, பயறுமாவு அல்லது உடைத்த கடலை மாவு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து பிசையவும்.

வேண்டுமென்றால் நீர் சேர்த்துப் பிசையவும்.

ஓமப்பொடி அச்சில் போட்டு எண்ணையில் பொரிக்கவும்.

ஆறியதும் உதிர்த்து சாட் மசாலாத் தூள் கலந்து பரிமாறவும்.

Post a Comment