பியூட்டி பார்லர்” போகாமலேயே முகம் பொலிவு பெற

Loading...
Description:

face

தயிருடன், கடலை மாவு கலந்து முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இவ் வாறு செய்வதால், முகத்தில் ஏற்படும் சுருக்கம் மறையும்.
* கடலைமாவுடன் சிறிது மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, பால் கலந்து முகத்தில் தடவி, காய்ந்தவுடன் மிதமான சுடுநீரில் கழுவ, முகம் மிருதுவாகும்.
* ஆரஞ்சு பழத்தை இரண்டாக வெட்டி முகத்தில் தேய்த்து, பத்து நிமிடம் கழித்து, சோப்பு போட்டு கழுவ வேண்டும். தின மும் இவ்வாறு செய்து வந்தால், முகம் பளபளப்பாகவும், இளமையுடனும் இருக்கும்.
* முகத்தில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்க, அடிக்கடி எலுமிச்சை சாற்றை தடவ வேண்டும். தினமும் இவ்வாறு செய்வதால், முடி வளர்ச்சி குறைந்து, முகம் அழகு பெறும்.
* மோரை முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து முகத்தைக் கழுவினால், வறண்ட சருமம், புதுப் பொலிவடையும்.
* வீட்டிலிருக்கும் போது, பால் ஏடுகளை முகத்தில் தேய்த்து வரவும்.
* புதினா இலைகளை அரைத்து சாறெடுத்து முகத்தில் தடவி வர, உலர்ந்த தன்மை நீங்கும். முகப்பருக்களுக்கும் நிவாரணம் கிடைக்கும்.
* முல்தானிமெட்டியை தண்ணீரில் குழைத்து, முகத்தில் தடவி வர, முகம் மலர்ச்சியடையும்.
* முகத்திற்கு அடிக்கடி க்ரீம் பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
அது முகத் தசைகளின் மென்மையை போக்கி விடும். அதுபோல், பரு இருப்பவர்கள், பேஷியல் செய்வதை தவிர்ப்பது நல்லது.
 

Post a Comment