பிச்சுபோட்ட கோழி

Loading...
Description:

14199193_1081416031905452_6858034111199009969_n

இது எனக்கு மிகவும் பிடித்தமான உணவு. நான் தொண்டைமண்டலத்தை சேர்ந்தவராக இருந்தாலும்.

எனக்கு கொங்கு மண்டலத்தின் உணவுகள் மீது ஒரு தனி ஈர்ப்பு மட்டும் ஈடுபாடு.

இந்த வேகவைத்த சிக்கனை நன்றாக பிச்சு கொள்வது அவசியம். எவ்வளவு சிறிய துண்டுகளாக பிச்சுபோடுகிறோமோ அந்த அளவுக்கு மசாலாவுடன் கறி ஒன்றினையும் சுவையும் இரட்டிபாகும்.

இன்று எனக்கு பிறந்த நாள் ஆதலால் எனக்கு பிடித்த உணவை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தேவையான பொருட்கள்
சிக்கன் எலும்பில்லாதது 250 கிராம்
வெங்காயம் 3 பெரியது ( பொடியாக நறுக்கியது )
தக்காளி 2 பெரியது ( பொடியாக நறுக்கியது )
இஞ்சி-பூண்டு விழுது 1 1/2 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள் 1/2 தேக்கரண்டி
வரமிளகாய் தூள் 1 தேக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
பட்டை அரை இன்ச்
கிராம்பு 2
வேர்கடலை எண்ணெய் 2 மேஜைக்கரண்டி

மசாலா அரைக்க
மிளகு 3 தேக்கரண்டி
சீரகம் 1/2 தேக்கரண்டி
சோம்பு 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி விதைகள் 1 தேக்கரண்டி

செய்முறை

1. மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக வடச்சட்டியில் சேர்த்து சிறுதீயில் நன்கு வதக்கி கொண்டு கருகிவிடாமல் பார்த்து கொள்ளவும் , எடுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு நன்றாக பொடியாக பொடித்து கொள்ளவும்.

2. சிக்கனை நன்றாக சுத்தமாக கழுவி, பின்பு சிக்கனை மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக பிசிறி 10 நிமிடங்கள் ஊறவைத்து கொள்ளவும்.

3. பிறகு ஊறவைத்தள்ள சிக்கனை ஒரு பாத்திரத்துல போட்டு தேவையான அளவிலான தண்ணீர் ஊற்றி 10 நிமிடங்கள் வேகவிடவும்.

4. பிறகு சிக்கன் வெந்து விட்டது என்று உறுதிபடுத்திய பின்னர் சிக்கன் வடிசாறை வடித்துவிட்டு, அதனை குளிர்ச்சியான தண்ணீரில் ஒரு அலசு அலசி எடுத்து கொள்ளவும். பிறகு நமது கைகளால் பிச்சுபோட வேண்டும்.

5. ஒரு வடச்சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து வெடிக்க ஆரம்பித்ததும் அதில் கறிவேப்பிலையை சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு பட்டை, கிராம்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

6. பிறகு அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நன்கு சிறுதீயில் பொன்னிறமாகும் வரை வதக்கவும். பின்பு அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

7. இப்பொழுது அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு அதில் பிச்சுபோட்ட சிக்கனை சேர்த்து நன்கு சிறுதீயில் கிளறவும். அதில் வரமிளகாய் தூள் மற்றும் தேவையான அளவு உப்புத்தூள் சேர்த்து நன்றாக சிறுதீயில் மூடியை மூடி வைத்து 5 நிமிடங்கள் வேகவிடவும். சிறிது தண்ணீர் கூட சேர்க்க கூடாது.

8 . பொடி செய்து வைத்துள்ள மசாலா பொடியை சேர்த்து நன்றாக கிளறவும். சிறுதீயில் வைத்து 10 நிமிடங்கள் வரை கிளறவும். இடை இடையில் அடிபிடிக்காமல் பார்த்து கொள்ளவும். அதே சமயத்துல இடை இடையே 2 தேக்கரண்டி எண்ணெய் விட்டு கொண்டே இருக்கவும். தண்ணீர் என்பதற்கு பேச்சே இருக்க கூடாது.

9. இப்பொழுது மசாலா பொடியின் பச்சை வாசனை போனதும் கொத்தமல்லி இலைகளை தூவி அடுப்புல இருந்து இறக்கவும்.

Post a Comment