பழ கேக்,tamil samayal

Loading...
Description:

indexதேவை

:காய்ந்த திராஷைப் பழம் – 1 1/2 கப்

கொட்டை எடுத்த பேரீச்சம்பழம் – 1 1/2 கப்

பழத்தோல் துண்டுகள் – 1/2 கப்

முந்திரிப்பருப்பு – 1/2 கப்

ஜாதிக்காய் பொடி – 1/2 தேக்கரண்டி

பேக்கிங் பவுடர் – 1 தேக்கரண்டி

வெனிலா எஸ்ஸென்ஸ் – 10 சொட்டு

வெண்ணெய் – 1 1/2 கப்

சர்க்கரை – 1 1/2 கப்

முட்டை – 4மைதா – 3/4 கப்தேன் – 1/2 கப்
செய்முறை: பழங்களை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். முந்திரிப்பருப்பைச் சிறிது பன்னீர் விட்டு அரைக்கவும். முட்டையின் வெள்ளைக் கருவையும், மஞ்சள் கருவையும் வெவ்வேறாக அடித்து வைத்துக் கொள்ளவும். சீனியையும், வெண்ணெயையும் நன்கு கடைந்து பின் கொஞ்சம் கொஞ்சமாக பேக்கிங் பவுடர் கலந்து 5 முறை சலித்து வைத்திருக்கும் மாவையும், அடித்த மஞ்சள் கருவையும் மாறி மாறி சேர்த்துக் கலக்கவும். பிறகு அரைத்த முந்திரிப் பருப்பையும் தேனையும் கலந்து அடிக்கவும். கடைசியில் வெள்ளைக்கருவை கலக்கவும். மாவு கலந்த பிறகு அதிகமாகக் கடையக் கூடாது. மெதுவாக கரண்டியினால் கலக்க வேண்டும். பழங்களை முதலில் சிறிதளவு மாவில் தேய்த்து வைத்திருக்க வேண்டும். அவற்றையும் எசன்ஸ், ஜாதிக்காய் பொடியையும் கலந்து, வெண்ணெய் தடவிய டின்களில் பேக்கிங் செய்யவும்

Post a Comment