பட்டாணி மசாலாTamil Recipe Cooking Methods Video by Tamil Samayal

Loading...
Description:

பட்டாணி மசாலா

» பட்டாணி மசாலா

பட்டாணி மசாலா

பட்டாணி மசாலா தேவையான பொருட்கள்

காய்ந்த பட்டாணி                          – 1/4 கிலோ
வற்றல் மிளகாய்                           – 4
சி.வெங்காயம்                                – 5
பூண்டு                                                 – 6 பல்
இஞ்சி                                                 – 1 துண்டு
சோம்பு, சீரகம், கசகசா              – மூன்றும் 1/2 ஸ்பூன்
பொட்டுக்கடலை                          – 2 ஸ்பூன்
தேங்காய் துருவல்                       – 2 ஸ்பூன்
பெ.வெங்காயம்                             – 1
தக்காளி                                             – 1

பட்டாணி மசாலா செய்முறை

காய்ந்த பட்டாணியை முதல் நாள் இரவு ஊறவைத்துக் கொள்ளவும். காலையில் தண்ணீரை வடித்து உப்பு போட்டு பிரஷ்ஷர் குக்கரில் வேக விட்டு எடுத்துக் கொள்ளவும். இருப்புச் சட்டியில் 4 ஸ்பூன் எண்ணெய் விட்டு சிறிது பட்டை சீரகம் போட்டு தாளித்து பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கி மிளகாய், சோம்பு, சீரகம், வெங்காயம், பூண்டு, இஞ்சி, கசகசா, தேங்காய் போட்டு கடலை எல்லாம் சேர்த்து அரைத்த வெங்காயம் தக்காளியுடன் சேர்த்து நன்கு வதக்கி, 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு போட்டு நன்கு கொதிக்கும் போது பட்டாணியைப் போட்டு சுருள வதக்கி, 1 ஸ்பூன் ப.அரிசி மாவு கரைத்து ஊற்றி கிளறி இறக்கவும். விருப்பமானால் தேங்காய், மாங்காயை நீளமாக நைசாக நறுக்கி போட்டு இறக்கலாம். இதே போல் மொச்சை, கொண்டைக் கடலையையும் செய்யலாம்.

Post a Comment