பட்டாணி குருமா

Loading...
Description:

13590249_1041528099227579_1576652476439394849_n


இந்த குருமா சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை வகைகளுக்கு நல்ல சைட்டிஷ்சா செய்து கொள்ளாம்.

தேவையான பொருட்கள்
பச்சை பட்டாணி 2 கப்

மசாலா அரைக்க
சின்ன வெங்காயம் 12 ( பொடியாக நறுக்கியது )
வெண்ணை 1 மேஜைக்கரண்டி
எண்ணெய் 1 தேக்கரண்டி
இஞ்சி-பூண்டு விழுது 1 மேஜைக்கரண்டி
வரமிளகாய் 4
சோம்பு 1 மேஜைக்கரண்டி
முழு முந்திரி பருப்பு 15
கொத்தமல்லி பொடி 1 மேஜைக்கரண்டி
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
அண்ணாச்சி மொக்கு 1
மராட்டிய மொக்கு 1
பட்டை 1 இன்ச்
கிராம்பு 2

செய்முறை

1. வடச்சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் வெண்ணை போட்டு நன்றாக காய்ந்ததும் பட்டை, கிராம்பு, அண்ணாச்சி மொக்கு, மராட்டிய மொக்கு சேர்த்து நன்கு வதக்கவும். பின் சோம்பு மற்றும் முந்திரி பருப்பை சேர்த்து நன்றாக வதக்கவும்.

2. பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தை போட்டு நன்றாக பொன்னிறமாக வதக்கவும். இஞ்சி-பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும். வரமிளகாயையும் சேர்த்து நன்கு வதக்கவும், பின்பு பொடி வகைகளை சேர்த்து நன்கு வதக்கவும்.

3. பிறகு வடசட்டியில் வதக்கிய கலவையை நன்றாக ஆறவைத்து மிக்ஸியில் நைசாக அரைக்கவும்.

4. இப்பொழுது அரை வேக்காடு வேக வைத்து பட்டாணியை எடுத்து புதிய வடச்சட்டியில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க வைக்கவும். தேவையான அளவு உப்பையும் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

5. தண்ணீர் கொதிக்க தொடங்கியதும் அதில் அரைத்து வைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். பட்டாணி நன்றாக வெந்து உள்ளதா என்று சரி பார்த்துக்கொள்ள வேண்டும். உப்பு மற்றும் காரத்தையும் சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.

6. குருமாவின் பச்சை வாசனை போய் நறுமணம் வீச தொடங்கும். குழம்பின் கெட்டி தன்மை நமக்கு ஏற்றவாறு கவனித்து கொள்ள வேண்டும்.

Post a Comment