பஞ்சாமிர்தம் செய்யும் முறை

Loading...
Description:

பஞ்சாமிர்தம் செய்யும் முறைதேவையான பொருள்கள் :

பேரிச்சம் பழம் – 10
வாழைப்பழம் – 4 – 5
வெல்லம் – அரை கப்
கல்கண்டு – கால் கப்
உலர்ந்த திராட்சை – 10
தேன் – 2 மேசைக்கரண்டி
ஏலக்காய் பொடி – கால் தேக்கரண்டி

செய்முறை :

தேவையான அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்.

வாழைப்பழத்தை தோலுரித்து ஒரு பாத்திரத்தில் போட்டு கைகளால் பிசைந்து கொள்ளவும்.

வெல்லத்தை இடித்து அல்லது பொடி செய்து கொள்ளவும்.

பிசைந்து வைத்துள்ள வாழைப்பழத்துடன் பொடி செய்த வெல்லத்தைச் சேர்த்து கலந்து கொள்ளவும்.

பிறகு நறுக்கிய பேரிச்சம் பழத்தைச் சேர்த்துக் கலக்கவும்.

அத்துடன் உலர்ந்த திராட்சை சேர்த்துக் கலந்து கொள்ளவும்.

கடைசியாக தேன், கல்கண்டு மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து, நன்கு கலந்து ஒரு மணி நேரம் குளிர வைத்து உண்ணவும்.

சுவையான பஞ்சாமிர்தம் தயார்.

Post a Comment