பச்சை மிளகாய் நாட்டுகோழி வறுவல்,tamil samayal

Loading...
Description:

இந்த உணவை எனக்கு வேலூர் மாவட்டம் சுற்றுலா தலமாக விளங்கும் ஏலகிரி ஆலீடே ரிசார்ட்ஸ்ல் எனக்கு சமைத்து வழங்கப்பட்டது.

இந்த உணவு அங்குள்ள குளிருக்கும் , குளிர்ச்சிக்கும் சரியான உணவாக திகழ்ந்தது காரம் அதிகமாக இருந்தாலும் குளிருக்கு தேவைப்பட்டது போல் ஒரு உணர்வு.

உட்பொருள் குறைவாக இருந்தாலும் சுவை அட்டகாசமாக இருந்தது. நாட்டுக்கோழி கறி திகட்டவே இல்லை , சுவையால் கறியை மட்டுமே சாப்பிட வேண்டும் என்று தோன்றியது.

தேவையான பொருட்கள்
நாட்டுகோழி 750 கிராம்
பச்சை மிளகாய் 75 கிராம்
பழுத்த பச்சை மிளகாய் 50 கிராம்
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைகரண்டி
எலுமிச்சம்பழ சாறு 2 மேஜைக்கரண்டி
பச்சை குடமிளகாய் 1 ( பொடியாக நறுக்கியது )
உப்புத்தூள் தேவையான அளவு
மரசெக்கு கடலெண்ணய் 6 மேஜைக்கரண்டி
பசு வெண்ணை 2 மேஜைக்கரண்டி
கறிவேப்பில்ல கொஞ்சமாக

செய்முறை
1. நாட்டுக்கோழியை நன்றாக சுத்தமாக கழுவி கொள்ள வேண்டும். நாட்டுக்கோழியை மிகவும் சிறிய சிறிய துண்டுகளாக வெட்டி கொள்ள வேண்டும்.

2. இதற்கு இரும்பு வடச்சட்டி அல்லது மண் வடச்சட்டியை மட்டும் தான் பயன்படுத்த வேண்டும்.

3. நாட்டுக்கோழியை 1 மேஜைக்கரண்டி இஞ்சி-பூண்டு விழுது, தேவையான அளவு உப்பு மற்றும் எலுமிச்சம்பழ சாறு கலந்து நன்றாக பிசிறி குறைந்தபட்சம் இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும்.

4. இப்பொழுது வடைச்சட்டியில் மரச்செக்கு கடலெண்ணய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் கறிவேப்பில்ல சேர்த்துகோங்க அதனுடன் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து நன்றாக பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

5. பிறகு பொடியாக நறுக்கி ஊற வைத்துள்ள நாட்டுக்கோழியை சேர்த்துகோங்க நன்றாக சிறிது சிறிதாக குளிர்ந்த நீர் தெளித்து வதக்க வேண்டும்.

6. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய் மற்றும் பழுத்த பச்சை மிளகாய் அதனுடன் குடமிளகாயை சேர்த்துகோங்க நன்றாக மிளகாய் குழைய குழைய வதக்க வேண்டும்.

7. அதில் தேவையான அளவிலான உப்புத்தூளையும் சேர்த்துகோங்க நன்றாக நாட்டுக்கோழியை பொறுமையாக வடச்சட்டியிலேயே கடலெண்ணய் , மிளகாய் மற்றும் உப்பு இதிலேயே வேகவைக்க வேண்டும். தேவைபடும் நேரத்துல தண்ணீரை தெளிக்க வேண்டும் சிறிது மட்டும் சேர்த்து கொள்ளலாம்.

8. கறி நன்றாக வெந்துவிட்டது என்று உறுதிபடுத்திய பின்னர் பசு வெண்ணையை சேர்த்துகோங்க அதிலேயே நன்றாக ஃப்ரை செய்ய வேண்டும்.

9. நாட்டுக்கோழி நன்றாக வெந்துவிட்டது என்று உறுதிபடுத்திய பின்னர் எடுத்து பரிமாறவும்.

Post a Comment