பச்சை புளி ரசம்

Loading...
Description:

13516228_1042301432483579_433509108202328061_n


இந்த பச்சை புளி ரசம் செய்து உண்டால் நமது உடலுக்கு மிகவும் நல்லது. மாதத்தில் ஒரு முறை செய்து உண்ணலாம்.

இந்த உணவும் தமிழக-ஆந்திர எல்லை பகுதிகளில் மிகவும் பிரபலம்.

இந்த உணவை நான் எனது ஐயம்மா ( எனது பாட்டி ) அவர்களிடம் இருந்து கற்றுக் கொண்டேன். எனது பேச்சுலர் வாழ்க்கையில் அடிக்கடி செய்யும் உணவு.

இந்த உணவை சுடு சாதத்திற்கு ஏற்ற பக்க உணவு ஆகும்.

தேவையான பொருட்கள்
புளி 1 எலுமிச்சை அளவு
உப்பு தேவையான அளவு
வெங்காயம் 1 பெரியது ( பொடியாக நீளவாக்கில் அரிந்தது )
பச்சை மிளகாய் 5 ( பொடியாக நறுக்கியது )
சீரகத்தூள் 1/2 தேக்கரண்டி
கொத்தமல்லி தூள் 1/4 தேக்கரண்டி
மிளகு தூள் 1/2 தேக்கரண்டி

தாளிக்க
எண்ணெய் 3 மேஜைக்கரண்டி
சீரகம் 1/2 தேக்கரண்டி
கடுகு 1/2 தேக்கரண்டி
வரமிளகாய் 4
கறிவேப்பிலை 6 ( பொடியாக நறுக்கியது )
மஞ்சள்தூள் 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி இலைகள் 1 கைப்பிடி

செய்முறை
1. புளியை தண்ணீர் ஊற்றி நன்றாக கரைத்து புளி கரைசலை எடுக்கவும்.

2. மீதமுள்ள புளியிலும் தண்ணீர் ஊற்றி மறுபடியும் நன்றாக கரைத்து இறுதியாக புளி கரைசலை பிழிந்து எடுக்கவும்.

3. பிறகு ஒரு பாத்திரத்தில் நீளமாக வெட்டியுள்ள வெங்காயத்தை போட்டு, பச்சை மிளகாயை சேர்த்து, தேவையான அளவு உப்பையும் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.

4. பாத்திரத்தில் புளி கரைசலை ஊற்றி கொள்ளவும். புளி கரைசல் மிகவும் புளிப்பு தண்மையானதாக இருந்தால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.

5. இந்த கலவையில் தேவையான அளவு உப்புத்தூளையும் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

6. இக்கலவையையில் சீரகத்தூளையும் , மிளகுத்தூளையும், கொத்தமல்லி தூளையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

7. இந்த புளி கரைசலில் 1 தேக்கரண்டி வெள்ளத்தை பொடி செய்து சேர்த்து கரைத்து கொள்ளவும்.

8. பிறகு ஒரு வடச்சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கடுகு சேர்த்து வெடிக்க ஆரம்பித்ததும் சீரகம் சேர்த்து நன்கு பொரிந்ததும். அதில் பொடியாக வைத்துள்ள வரமிளகாயை சேர்த்து நன்கு வதக்கவும்.

9. அதில் பொடியாக கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதில் கொஞ்சம் மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு தாளித்த பொருளை புளி கரைசல் கலவையில் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.

10. இப்பொழுது பச்சையாக உள்ள கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.

Post a Comment