நெய் மீன் ஃப்ரை,tamil cooking recipe 2017

Loading...
Description:

நெய் மீன் என்று சொன்னால் இந்த பகுதிகளுக்கு உள்ளவர்களுக்கு தெரியாது. இந்த பகுதியில் அதன் பெயர் கெழுத்தி மீன்.

இந்த மீன் ஃப்ரை வேலூர் மாவட்டம் , திருப்பத்தூர் அருகில் உள்ள ஜலக்காம்பாறை நீர்வீழ்ச்சியில் உள்ள அக்கா கடை மீன் வறுவல் தான் இது.

தேவையான பொருட்கள்
நெய் மீன் துண்டுகள் 4
பச்சை மிளகாய் 2 ( பொடியாக நறுக்கியது )
மரச்செக்கு கடலெண்ணய் பொறிப்பதற்கு தேவையான அளவு

மசாலா அரைக்க
இஞ்சி 1 இன்ச்
சின்ன வெங்காயம் 8
பூண்டு 6
சிவப்பு நிறமூட்டி 1 சிட்டிகை
முட்டை 2
வரமிளகாய் 3
குரு மிளகு 1 தேக்கரண்டி
எலுமிச்சம்பழசாறு 3 தேக்கரண்டி
பொட்டுக்கடலை 2 தேக்கரண்டி
பச்சை மிளகாய் 1
கறிவேவப்பிலை 1 கொத்து
உப்புத்தூள் தேவையான அளவு

செய்முறை
1. மீன் துண்டங்களை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

2. இப்பொழுது மசாலா அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்துகோங்க, சிறிது தண்ணீர்கூட விடாமல் முட்டையை உடைத்து ஊற்றி நன்றாக மையமாக விழுதாக அரைத்து கொள்ளவும்.

3. இப்பொழுது நன்றாக தண்ணீர் வடிந்த பின் , மீன் துண்டுகள் மீது அரைத்து வைத்துள்ள மசாலாவை பூசவும்.

4. பிறகு அதில் நன்றாக மசாலாவில் பிரட்டி வைத்துள்ள மீன் துண்டுகளை நன்றாக சுட்டெரிக்கும் வெயிலில் வைத்து நன்றாக மசாலாவில் மீன் துண்டங்களை ஊற வைக்கவும்.

5. இப்பொழுது நன்றாக மீன் துண்டுகள் மசாலாவில் ஊறி விட்டது என்று உறுதிபடுத்திய பின்னர்.

6. இச்சமயத்துல வடச்சட்டியில் பொறிப்பதற்கு தேவையான அளவிலான மரச்செக்கு கடலெண்ணய் ஊற்றி நன்றாக காய்ந்ததும் அதில் மீன் துண்டுகளை சேர்த்து நன்றாக பொன்னிறமாக முறுகலாக வறுத்து எடுக்கும் சமயத்துல அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாயை சேர்த்துகோங்க நன்றாக வறுத்து எடுக்கவும்.

Post a Comment