நீங்கள் முயற்சி செய்து பார்க்க வேண்டிய‌ 5 அற்புதமான‌ காய்கறி சாறுகள்

Loading...
Description:

5-health-veg-juice1

காய்கறிகளில் சத்துக்கள் நிறைந்து இருப்பதால் உங்களுக்கு தேவையான ஊட்டச்சத்து இந்த‌ உணவிலேயே கிடைக்கிறது, எனவே நீங்கள் இவற்றை தினமும் உங்களது சமையலில் சேர்த்துக்கொள்ளலாம். எனினும், அன்றாட உணவில் காலை உணவுடன் காய்கறிகளை சேர்த்துக் கொண்டால் அது மிகவும் ஆரோக்கியமானதாகிறது. நீங்கள் காய்கறிகளை பயன்படுத்தும் போது அதில் மசாலாவை சேர்ப்பதால் அவற்றிலிருக்கும் நலனை சிறிது அளவிற்கு இழக்கிறீர்கள். எனவே, அதற்கு மாற்று வழி என்ன? ஆமாம், நீங்கள் சரியாகச் சொன்னீர்கள், காய்கறி சாறுகள் தான் அதற்கு மாற்று!( தமிழ் சமையல்.நெற் )
நீங்கள், அனைத்து சத்துக்களும் கிடைக்கும் காய்கறி சாறுகளை வீட்டிலேயே செய்ய முடியும். அதுவும் உங்கள் உணவு முறைக்கு இடையூறு எதுவும் இல்லாமல் செய்ய‌ முடியும். மேலும் காய்கறி சாறுகளில் வைட்டமின்கள் மற்றும் கனிமங்கள் நிறைய நிறைந்திருக்கிறது. காய்கறி சாற்றின் சுவையை அதிகரிக்க, நீங்கள் ஒரு சில மூலிகைகளை இதனுடன் சேர்க்கலாம். நீங்கள் அதிகம் பணம் செலவு செய்யாமல், வீட்டிலேயே காய்கறி சாறுகள் சிறந்த முறையில் செய்ய முடியும்.( தமிழ் சமையல்.நெற் )
நீங்கள் சில சுலபமான காய்கறி சாறுகளை செய்ய விரும்பினால், இதைத் தொடர்ந்து படிக்கவும்.
5 சிறந்த மற்றும் ஆரோக்கியமான காய்கறி சாறுகள்:( தமிழ் சமையல்.நெற் )
இந்த சமையல் முயற்சியை நீங்கள் மறுபடியும் செய்து பார்க்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்!

5-Healthy-Veg-Juice-Recipes
1. கேரட் – எலுமிச்சை சாறு:
கேரட் சுவையாக இருப்பதோடு, உங்கள் கண்கள் மற்றும் தோலுக்கு மிகவும் நல்லது, இது அதிக அளவு  பீட்டா கரோட்டினைக் கொண்டுள்ளது. சற்று இனிப்பு சுவையை தர இதனுடன் கொத்தமல்லியை சேர்த்துக் கொள்ளலாம். மேலும் இதில் எலுமிச்சை சாறை சிறிதளவு சேர்த்தால் சுவை மேலும் அதிகரிக்கிறது, இது உங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின் சி யை தருகிறது. நீங்கள் சாறு செய்வதற்கு முன் நன்கு கேரட்டை கழுவ வேண்டும். இதில் இருக்கும் மண்ணை நன்கு நீக்கிய பிறகே இதை உபயோகிக்க வேண்டும். கேரட் சாறு 1 டம்ளர் என்றால், அதில் பாதி அளவு எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும்.( தமிழ் சமையல்.நெற் )
செய்முறை:( தமிழ் சமையல்.நெற் )
– வெளி தோலை நீக்கி விட்டு, ந‌ன்கு கழுவிய பிறகு கேரட்டை நறுக்கி கொள்ளவும்.
– தேவையான அளவு சாறு உருவாக்க போதுமான அளவு தண்ணீரை கேரட்டில் சேர்க்கவும்.
– இதில் எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு கலக்கி கொள்ள‌வும்.( தமிழ் சமையல்.நெற் )
– தயாரித்த பிறகு இதை குளிர்பதனப் பெட்டியில் வைக்க வேண்டும்.( தமிழ் சமையல்.நெற் )
– செலரி அல்லது புதினா ஒரு தண்டு கொண்டு இதை அழகுபடுத்த வேண்டும்.( தமிழ் சமையல்.நெற் )
– நீங்கள் இதனுடன் சிறிதளவு சர்க்கரை சேர்த்து கொண்டு இந்த சாறை குடிக்கலாம். நீங்கள் சர்க்கரைக்கு பதிலாக தேன் ஒரு சில துளிகளை ஊற்றலாம்.

5-Healthy-Veg-Juice-Recipes-2
2. முட்டைக்கோஸ் சாறு:
முட்டைக்கோஸ் பல குடும்பங்களில் பரவலாக பயன்படுத்தப்படும் காய்கறியாகும். இது சாலடுகள் மற்றும் சைட் டிஷ்களுக்கும் மற்றும் ரசங்கள் பல செய்வதற்கு பயன்படுத்தப்படும். எனினும், இதை கொண்டு வீட்டிலேயே சாறு செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. நீங்கள் குறிப்பாக சிவப்பு முட்டைக்கோஸை பயன்படுத்தினால் அது உடலுக்கு மிகவும் நல்லது. அதில் சத்துக்களும் நிறைந்து காண‌ப்படுகிறது.( தமிழ் சமையல்.நெற் )
செய்முறை:( தமிழ் சமையல்.நெற் )
– முட்டைக்கோஸை ஜூஸாரில் போட்டு சாறு எடுக்க வேண்டும்.( தமிழ் சமையல்.நெற் )
– இதை குளிர்பதனப் பெட்டியில் வைக்க வேண்டும்.( தமிழ் சமையல்.நெற் )
– வெறும் முட்டைக்கோஸ் சாறு சுவையற்றதாக இருக்கிறது என்றால், நீங்கள் முட்டைக்கோஸில் கேரட் சாறு விட்டு கலந்தும் சாறு செய்யலாம். நீங்கள் இதில் சுவையை சேர்க்க விரும்பினால் இந்த சாற்றில் சில துறுவிய இஞ்சி, உப்பு மற்றும் மிளகு சேர்த்துக் கொள்ளலாம்.

5-Healthy-Veg-Juice-Recipes-3
3. வெள்ளரிக்காய் இஞ்சி சாறு:
சில சமயங்களில், நீங்கள் பார்ட்டி அல்லது விடுமுறை தினத்தன்று மிகவும் அதிகமாக  வெளியே உணவு உட்க்கொண்டிருந்தால், உங்கள் உடலில் நச்சு அதிகளவில் சேர்ந்திருக்கும். இதை நீக்க‌, நீங்கள் இஞ்சி-வெள்ளரி கலந்த சாற்றை முயற்சித்துப் பார்க்கலாம். வெள்ளரியில் தண்ணீர் சத்து நிறைய உள்ளது மற்றும் இது உடலில் இருக்கும் நச்சு பொருள்களை நீக்குவதற்கும் உதவுகிறது. இஞ்சி ஒரு அஜீரணக் கோளாறை சரி செய்ய‌ உதவுகிறது.
தவிர வெள்ளரி மற்றும் இஞ்சியுடன், நீங்கள் ஒரு எலுமிச்சை பழ சாறு, சில சிவப்பு மிளகாய் வேண்டுமென்றால் சேர்க்கலாம்.( தமிழ் சமையல்.நெற் )
செய்முறை:( தமிழ் சமையல்.நெற் )
– முதலில் வெள்ளரி மற்றும் எலுமிச்சையை எடுத்துக் கொள்ளவும், இதனுடன் துருவிய இஞ்சி மற்றும் சில சிவப்பு மிளகாயை சேர்க்கவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்துக் கொள்ளவும்.
– இவை அனைத்தையும் கலந்து புதினா கொண்டு அழகுபடுத்தவும்.( தமிழ் சமையல்.நெற் )
– ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து பரிமாறவும்.( தமிழ் சமையல்.நெற் )
4. பீட்ரூட்-கேரட் சாறு:
கேரட் மற்றும் பீட்ரூட் இந்த இரண்டும் சத்துக்கள் நிறைந்த காய்கறிகளாக உள்ளன. இவற்றை வீட்டில் இருந்தபடியே சுவையான மற்றும் ஆரோக்கியமான சாறு செய்ய நாம் பயன்படுத்தலாம்.( தமிழ் சமையல்.நெற் )
செய்முறை:( தமிழ் சமையல்.நெற் )
– நீங்கள் பீட்ரூட் மற்றும் கேரட் இரண்டையும் தோல் சீவிக் கொண்டு கழுவி விட வேண்டும்.
– சதுரமாக இவற்றை வெட்டி ஒரு ஜூஸரில் போட வேண்டும்.
– செலரி ஒரு தண்டு இதனுடன் சேர்த்து மற்றும் சிறிதளவு தண்ணீரை இதில் ஊற்ற வேண்டும்.
– அனைத்தையும் சேர்த்து கலந்துக் கொண்டு சிறிதளவு மிளகு பொடி தூவி பரிமாறவும்.
– நீங்கள் மேலும் சுவையை மேம்படுத்த எலுமிச்சை சாறு ஒரு சில துளிகள் சேர்க்கலாம்.
– இவற்றை சர்க்கரை சேர்த்து இனிப்பாகவும் சாப்பிடலாம்.

5-Healthy-Veg-Juice-Recipes-5
5. செலரி கீரை-வெள்ளரிக்காய் ஜூஸ்:
சுவையான சாறுகள் மற்றும் பழங்கள் பெரும்பாலும் நம் ஆரோக்கியத்தை அதிகரிக்கின்றன என்று நாம் நினைக்கிறோம். உண்மையில் செலரி மற்றும் வெள்ளரி போன்ற எளிய காய்கறிகளை,கொண்டே நாம் வீட்டிலேயே சிறந்த சாறுகளை செய்ய முடியும்.( தமிழ் சமையல்.நெற் )
முக்கிய பொருட்களாக ஒரு பெரிய வெள்ளரி, செலரி தண்டுகள், மற்றும் கீரைகள் இருந்தால் போதும். இதை கொண்டு நீங்கள் ஆரோக்கியமான சாறை தயாரிக்கலாம் வேண்டுமென்றால் இதனுடன் சிறிதளவு எலுமிச்சை சாறு சேர்க்கலாம்.
செய்முறை:( தமிழ் சமையல்.நெற் )
– வெள்ளரி மற்றும் அனைத்து காய்கறிகளையும் வெட்டி கலந்துக் கொள்ள வேண்டும்.( தமிழ் சமையல்.நெற் )
– ஒரு சில நிமிடங்கள் ஒன்றாக அவற்றை மிக்சியில் நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.( தமிழ் சமையல்.நெற் )
– நுரையை நீக்கி இத்துடன் எலுமிச்சை சாறு சேர்த்து கலந்துக் கொள்ளவும்.( தமிழ் சமையல்.நெற் )
– நீங்கள் சில ஐஸ் க்யூப்ஸ் சேர்த்து அல்லது குளிர்சாதன பெட்டியில் இந்த சாற்றை வைத்து குடிக்கலாம்.
– இதனால் நீங்கள் புத்துணர்ச்சி பெறுவீர்கள், எனவே இந்த ஒரு டம்ளர் குளிர்ந்த காய்கறி சாறு உங்கள் நாளை இனிமையாக தொடங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு உண்டு!( தமிழ் சமையல்.நெற் )

Post a Comment