நாட்டுக்கோழி குழம்பு ஃப்ரை

Loading...
Description:

தேவையான பொருட்கள்
நாட்டுகோழி 500 கிராம்
பெரிய வெங்காயம் 1 ( பொடியாக நறுக்கியது )
தக்காளி 1 ( பொடியாக நறுக்கியது)
இஞ்சி-பூண்டு விழுது 2 மேஜைக்கரண்டி
கறிவேப்பில்ல 1 கொத்து
பச்சை மிளகாய் 4 ( பொடியாக நறுக்கியது )
குரு மிளகு தூள் 4 தேக்கரண்டி
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
உப்புத்தூள் தேவையான அளவு
மரச்செக்கு கடலெண்ணய் 4 மேஜைக்கரண்டி

மசாலா அரைக்க
சின்ன வெங்காயம் 16
கொத்தமல்லி விதைகள் 1 மேஜைக்கரண்டி
வரமிளகாய் 6
கறிவேப்பிலை 1 கொத்து
பட்டை 1 இன்ச்
கிராம்பு 4
அண்ணாச்சி மொக்கு 1
மராட்டிய மொக்கு 1
சோம்பு 1/2 தேக்கரண்டி
முந்திரி பருப்பு 10
கொத்தமல்லி இலைகள் கொஞ்சம்

செய்முறை
1. நாட்டுக்கோழி துண்டுகளை சுத்தமாக நன்றாக கழுவி வைத்து கொள்ளவும்.

2. இப்பொழுது பிரஷர் குக்கரில் தண்ணீர் ஊற்றி , அதில் தேவையான அளவிலான உப்புத்தூள் சேர்த்துகோங்க , மஞ்சள் தூள், பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, பிரஷர் குக்கரின் மூடியை மூடி தேவையான அளவிலான விசில் விட்டு வேக வைத்து கொள்ளவும்.

3. மிக்ஸியில் அரைக்க கொடுத்துள்ள பொருட்களை ஓன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக நைசாக மையமாக விழுதாக அரைத்து கொள்ளவும்.

4.இப்பொழுது ஒரு இரும்பு வடச்சட்டியில் வேர்கடலை எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் கறிவேப்பில்ல போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

5. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயத்தை சேர்த்துகோங்க நன்றாக பொன்னிறமாக வதக்க வேண்டும்.

6. அதில் இஞ்சி-பூண்டு விழுதையும் சேர்த்து பச்சை வாசனை போகும் வரைவதக்கவும்.

7. அதில் பொடியாக நறுக்கி வைத்துள்ள தக்காளியை சேர்த்து நன்றாக கூழ் போல் ஆகும் வரை வதக்கவும்.

8. இதில் பிரஷர் குக்கரில் வேக வைத்துள்ள நாட்டுக்கோழி வெந்த கறியை போட்டு நன்றாக இரண்டு கிளறவும்.

9. இப்பொழுது அரைத்துவைத்துள்ள மசாலா கலவையை சேர்த்து நன்றாக எண்ணெய்ல ஊற்றி பச்சை வாசனை போகும் வரை கிளறவும்.

10. அதில் பிரஷர் குக்கரில் வைத்துள்ள நாட்டுக்கோழி சாறை ஊற்றி நன்றாக கிளறவும். மிதமான தீயில் வைத்து நாட்டுக்கோழி சாறுடன் நாட்டுக்கோழி கறியை நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

11. நாட்டுக்கோழி குழம்பு ஃப்ரை கலவையை வடச்சட்டியில் நன்றாக சிறுதீயில் வைத்து நன்றாக வற்ற வைத்து , நன்றாக சுருள சுருள வதக்கவும். தேவைக்கேற்ப கடலெண்ணய் சுற்றி வர விட்டு நன்றாக ஃப்ரை செய்யவும்.

12. அதில் பொடியாக தூள் செய்து வைத்துள்ள குரு மிளகு தூளை , நாட்டுக்கோழி குழம்பு ஃப்ரையில் சேர்த்து சுருள சுருள வதக்கவும்.

Post a Comment