தோசையும் மிளகாய் கறியும் ,tamil samayal kurippu

Loading...
Description:

index

பருத்தித்துறையில் தோசையும் மிளகாய் கறியும் பெயர் பெற்றதொரு உணவு.தோசை தான் எல்லோருக்குமே செய்யத் தெரியுமே.மிளகாய் கறி மட்டும் எப்படி செய்வது என்று  ​ஒரு சிறு குறிப்பு தருகிறேன்

 ​செய்து ​பாருங்கள்.
மிளகாய் கறி 
தேவையான பொருட்கள்:
(1) குடை மிளகாய் அல்லது பெரிய மிளகாய் – 100 g
(2) ஊர் கத்தரிக்காய் – 250 g
(3) தேங்காய் பூ – பாதித்தேங்க்காய்  அரைத்த கூட்டு
(4) சிறிய வெங்காயம் – 200 g
(5) கறி வேப்பிலை – அளவாக
(6) உப்பு – தேவையான அளவு
(7) பழப் புளி – தேவையான அளவு
(8) கடுகு – 01 தேக்கரண்டி
(9) பெருஞ்சீரகம் – 02 தேக்கரண்டி
(10) மஞ்சள் தூள் அளவாக
(11) சின்ன சீரகம் – 01 தேக்கரண்டி
(12) வெள்ளைப்பூடு  – 04 பல்லு
(13) எண்ணெய் – அளவாக
(14)  செத்தல் மிளகாய் – 06
(15) வெந்தயம் – 01 தேக்கரண்டி
 
செய்முறை:
அளவான பாத்திரம் ஒன்றை அடுப்பில் வைக்கவும். சட்டி காய்ந்ததும் சிறிதளவு எண்ணெய் விட்டு அது சூடாகியதும் கடுகு,பெருஞ்சீரகம்,சின்ன​ச் ​ சீரகம்,வெந்தயம்  சிறிதாக அரிந்த வெங்காயம், வெள்ளைப்பூடு ,சிறிய துண்டுகளாக வெட்டிய செத்தல் மிளகாய்,கறி வேப்பிலை என்பவற்றை​ப் போ​ட் ​டு சிறிது நேரம் வதங்க விடவும். அரைப்பதமாகப் அது  வேகியதும் அதற்குள் சிறிய துண்டுகளாக வெட்டிய கத்தரிக்காய், ​பெரிய ​ மிளகாய் என்பவற்றையும் போட்டு மெல்ல கிளறி மெல்லிய வெப்பத்தில் மூடி விடவும். அது ஓரளவு வெந்ததும் அதற்குள் அரைத்த தேங்காய்க்  கூட்டு,தேவையான அளவு ​ உப்பு,​  சிறிது மஞ்சள் தூள் என்பவற்றை இட்டு மெல்லிதாக​க் ​ கிளறி மூடி விடவும்.அது ஓரளவு வெந்ததும் கடைசியா​ப் ​பழப்புளி விட்டு​த் ​ தக தக என்று கொதித்து ​ கூட்டு  கொஞ்சம் வற்றிப் ​ பொன்னிறமாக வரும் போது இறக்கி மூடி வைத்து விடவும்.
அதன் பின்னர் சுடச்சுட​த் ​​தோசை சுட்டு ​ அதனுடன் இந்தமிளகாய்​க் ​ கறி​யைப் பரிமாறலாம்

Post a Comment