தொப்பையைக் கரைத்து, தட்டையான வயிற்றைப் பெற உதவும் ஓர் அற்புத மருந்து

Loading...
Description:

தொப்பை ஒருவருக்கு வர ஆரம்பித்தால், அதுவே பல நோய்களை அழையா விருந்தாளியாக உடலினுள் நுழையச் செய்யும்.

எனவே தொப்பையைக் கரைத்து, தட்டையான வயிற்றைப் பெற உதவும் ஓர் அற்புத மருந்து குறித்து தமிழ் போல்ட் ஸ்கை கொடுத்துள்ளது. அதைப் படித்து குடித்து சிக்கென்று மாறுங்கள்.

01-தேவையான பொருட்கள்

சியா விதைகள் – 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன் தேன் – 1 டீஸ்பூன்

சியா விதைகள் சியா விதைகளில் புரோட்டீன் அதிகம் உள்ளது. இதில் உள்ள புரோட்டீன் கொழுப்புக்களை எதிர்த்துப் போராடும்.

எலுமிச்சையில் வைட்டமின் சி ஏராளமான அளவில் உள்ளது. இது உடலின் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, கொழுப்புக்களின் தேக்கத்தைக் குறைக்கும்.

தேனில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலுக்கு பாதுகாப்பை வழங்குவதோடு, தொப்பையைக் குறைக்கவும் உதவி புரியும்.

02-தயாரிக்கும் முறை

ஒரு பௌலில் சியா விதைகளைப் போட்டு, சிறிது நீர் ஊற்றி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அந்த விதைகளை மற்றொரு பௌலில் போட்டு, அத்துடன் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து நன்கு கலந்தால், தொப்பையைக் குறைக்கும் அற்புத மருந்து தயார்!

03-உட்கொள்ளும் முறை

தயாரித்து வைத்துள்ள இந்த கலவையை தினமும் காலையில் உணவு உட்கொண்ட பின் சாப்பிட வேண்டும். இப்படி ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டால், தொப்பை குறைந்திருப்பதைக் காணலாம்

Post a Comment