தொண்டைக்கு இதமான ஆட்டுக்கால் மிளகு ரசம்

Loading...
Description:

தேவையான பொருட்கள்:

ஆட்டுக்கால் – 3,
சின்ன வெங்காயம் – 250 கிராம்,
பூண்டு – 10 பல்,
இஞ்சி – சிறிய துண்டு,
காய்ந்த மிளகாய் – 20 கிராம்,
தனியா – 40 கிராம்,
சீரகம் – 20 கிராம்,
மிளகு – 10 கிராம்,
[பாட்டி மசாலா] மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்,
வெண்ணெய் – 20 கிராம்,
நெய் – சிறிதளவு,
கொத்தமல்லி – சிறிதளவு,
உப்பு – தேவைக்கு.

செய்முறை :

சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி வைக்கவும்.

கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

ஆட்டுக்காலை நன்றாக சுத்தம் செய்த துண்டுகளாக்கி கொள்ளவும்.

தோல் நீக்கிய சின்ன வெங்காயம், இஞ்சி, பூண்டு மூன்றையும் கொரகொரப்பாக தட்டிக்கொள்ளவும்.

வெறும் கடாயில் காய்ந்தமிளகாய், தனியா, சீரகம், மிளகை போட்டு வறுத்து ஆறியதும் பொடித்து கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் வெண்ணெய், நெய் ஊற்றி சூடானதும் இடித்த வெங்காயம், இஞ்சி, பூண்டு கலவை போட்டு வதக்கவும்.

அடுத்து அதில் இடித்த மசாலா பொடி, [பாட்டி மசாலா] மஞ்சள் தூள், மட்டன் கால் துண்டுகளை போட்டு, 2 லிட்டர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். இது நன்றாக கொதித்து 1 லிட்டராக சுண்டி வந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கி சூடாக பரிமாறவும்.

சூப்பரான ஆட்டுக்கால் மிளகு ரசம் ரெடி.

Post a Comment