தொடை மற்றும் இடுப்பு சதை குறைக்கும் பயிற்சி

Loading...
Description:

தொடை மற்றும் இடுப்பு சதை குறைக்கும் பயிற்சிஇந்த பயிற்சி விரைவில் நல்ல பலனைத்தரக்கூடியது. பெண்களுக்கு இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் இடை மெலிந்து அழகாக மாறுவதை காணலாம். இந்த பயிற்சி செய்ய முதலில் விரிப்பில் ஒரு பக்கமாக சாய்ந்து படுத்துக்கொள்ளவும்.

பின்னர் கால்களை ஒன்றாக இணைத்து வைத்து கொள்ளவும். வலது கையை தரையில் ஊன்றி கால்கள் இரண்டும் சேர்ந்த நிலையில் உடலை மேல் நோக்கி படம் A வில் உள்ளது போல் தூக்க வேண்டும்.

பின்னர் மெதுவாக கால்களை வளைக்காமல் உடலை மட்டும் படம் B-யில் உள்ளது போல் வளைக்க வேண்டும். பின்னர் மெதுவான மேலே எழ வேண்டும். பயிற்சி செய்யும் போது கை, கால் முட்டிகளை மடக்க கூடாது. இவ்வாறு ஆரம்பத்தில் 15 முதல் 20 முறையும் நன்கு பழகிய பின்னர் 25 முதல் 30 முறையும் அல்லது அதற்கு மேலும் செய்யலாம்.

Post a Comment