தொடைப்பகுதி கொழுப்பை குறைக்க வேண்டுமா? இதோ சூப்பர் ஐடியா!

Loading...
Description:

உடல் எடையைக் குறைப்பதற்கு, பல வித்தியாசமான பயிற்சிகள் இருந்தாலும், அதில் சில உடற்பயிற்சிகள் மட்டும் உடனடியாக பலன் தரக்கூடியவையாக உள்ளது.

அந்த வகையில் லையிங் சைடு லெக் ரைஸ் (Lying side leg raise) என்னும் உடற்பயிற்சியானது, மிகவும் சிறந்த ஒரு பயிற்சியாகும்.

இந்த பயிற்சியை தினமும் தொடர்ந்து செய்து வந்தால், நமது தொடைப் பகுதிகள் உறுதி அடைவதுடன், தொடையில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகளையும் குறைக்கச் செய்கிறது.
லையிங் சைடு லெக் பயிற்சியை செய்வது எப்படி?

முதலில் தரையில் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டு, வலது கையைத் தலைக்கு மேல் நீட்டி, அதன் மீது தலையை வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் இடது கையை முட்டிவரை மடித்து, வலது பக்கமாக தரையில் பதிக்க வேண்டும். வலது காலை சற்று மடித்து முன்புறமாக வைக்க வேண்டும்.

இடது காலை மட்டும் மேலே உயர்த்தி, ஐந்து விநாடிகள் இந்த நிலையில் இருக்க வேண்டும்.

பின்னர், படிப்படியாக பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதேபோல 15 முறை செய்துவிட்டு, பின் இடது பக்கமும் செய்ய வேண்டும்.

பயன்கள்

நமது தொடையின் பக்கவாட்டுப் பகுதி வலுவடைந்து, பக்கவாட்டில் இருக்கும் தசைகள் இறுகி, தொடைப் பகுதியில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரையும்.

Post a Comment