தேவையற்ற கொழுப்பை நீக்கும் அற்புத ஜூஸ்

Loading...
Description:
11831633_884389631636589_6180756039974600662_nஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்:-
எலுமிச்சை – 3
ஆரஞ்சு – 1
பார்ஸ்லி – 1 கொத்து (மல்லி)
தண்ணீர் – 2.5 லிட்டர்

ஜூஸ் செய்யும் முறை :-
முதலில் 2 எலுமிச்சையை பிழிந்து 2.5 லிட்டர் நீரில் கலந்து கொள்ள வேண்டும்.
பின் மீதமுள்ள 1 எலுமிச்சை மற்றும் ஆரஞ்சுப் பழத்தை வட்ட துண்டுகளாக வெட்டி, நீரில் போட்டுக் கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் பார்ஸ்லியை (மல்லி) நறுக்கி சேர்த்து நன்கு கலந்து, நாள் முழுவதும் தண்ணீருக்கு பதிலாக குடித்து வந்தால், கொழுப்புக்கள் கரையும்.
முக்கியமாக இந்த ஜூஸை, முதல் நாள் இரவே செய்து, மறுநாள் குடித்து வந்தால், அவற்றில் உள்ள முழு ஊட்டச்சத்துக்களையும் பெறலாம்.

எலுமிச்சை :-
எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் ஆசிட் மற்றும் வைட்டமின் சி, உடலின் ஆற்றலை அதிகரித்து, கலோரிகளை எரித்து, உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைத்து, வெளியேற்ற பெரிதும் உதவியாக இருக்கும்.

ஆரஞ்சு :-
ஆரஞ்சு பழத்திலும் வைட்டமின் சி மற்றும் சிட்ரிக் ஆசிட் உள்ளது. இதுவும் எலுமிச்சை பழத்தைப் போன்றே மிகவும் சக்தி வாய்ந்த உணவுப் பொருள். மேலும் இந்த பழம் ஜூஸிற்கு நல்ல சுவை மற்றும் மணத்தைத் தரும். அதே நேரம் இது கொழுப்புக்களை கரைக்கும் நொதிகளை வெளியேற்றி, கொழுப்பை கரைத்து எடையைக் குறைக்க உதவும்.

பார்ஸ்லி (மல்லி) :-

அன்றாட உணவில் சிறிது பார்ஸ்லியை சேர்த்து வந்தால், அதில் உள்ள சத்துக்கள், உடலின் நீர்ச்சத்தை தக்க வைப்பதோடு, ஆங்காங்கு தேங்கியுள்ள டாக்ஸின்களை வெளியேற்றி, மெட்டபாலிசத்தை அதிகரித்து, விரைவில் எடை மற்றும் தொப்பை குறைய உதவி புரியும்.

தண்ணீர்:-

அன்றாடம் தண்ணீரை எவ்வளவுக்கு எவ்வளவு அதிகமாக எடுக்கிறோமோ, அந்த அளவில் உடலில் நச்சுக்கள் தேங்குவதைத் தடுக்கலாம். மேலும் தண்ணீர் உடலுறுப்புக்களின் சீராக இயக்கத்திற்கு பெரிதும் உதவியாக இருப்பதோடு, மெட்டபாலிசத்தை அதிகரிக்கும்.

Post a Comment