தேங்காய் பால் பாயசம்

Loading...
Description:

தேவையான பொருட்கள்:

அரிசி: 50 கிராம்
தேங்காய்: 1 பெரியது
வெல்லம்: 200 கிராம்
ஏலக்காய் பொடி: கால் தேக்கரண்டி
முந்திரித் துண்டுகள்: 1 மேசைக் கரண்டி
நெய்: 1 மேசைக்கரண்டி

செய்முறை:

1.தேங்காயைத் துருவி எடுத்து, அதை மூன்று பாலாக எடுக்கவும்.

2.அடுப்பில் வாணலியை வைத்து, நெய்விட்டு அதில் முந்திரித் துண்டுகளை வறுக்கவும்.

3.பின் அதை எடுத்து தனியாக வைத்து, அரிசியைக் களைந்து வறுக்கவும்.

4.பின் அதை தேங்காய் 3 ம் பாலில் விட்டுக் குழைய வேகவைக்கவும்.

5.பின் 2 ம் பாலில் வெல்லத்தைக் கரைய வைத்து, வடிகட்டிக் கலக்கவும்.

6.பின் ஒரு கொதி வந்ததும் இறக்கி முதல் பாலைக் கலக்கவும். முந்திரி ஏலப்பொடி கலக்கவும். இது மிகவும் ருசியாக இருக்கும்

Post a Comment