தேங்காய் பால் ஆப்பம்

Loading...
Description:

appam-palappam

மீந்த சாதத்தில் செய்த தேங்காய் பால் ஆப்பம்

தேவையான பொருட்கள்:

பச்சரிசி அரிசி – 1 கப்
பழைய சோறு – 1கப்
உளுந்து – 5-6 டீ ஸ்பூன்
தேங்காய் பூ – 1/4 மூடி
தேங்காய் தண்ணீர் – 1/2 கப்
வெந்தயம் – 1 டீ ஸ்பூன்
ஆப்ப சோடா உப்பு – 1/2 டீ ஸ்பூன்
உப்பு- 1/4 டீ ஸ்பூன்
சீனி – 1 சிட்டிகை

செய்முறை:

1 பச்சரிசி, உளுந்து, வெந்தயம் ஆகியவற்றைத் 3 மணி நேரம் ஊறவைக்கவும்.
2.பிறகு சுத்தமாக அலசிய பிறகு ஊறவைத்த அரிசி கலவையினை சோறு மற்றும் தேங்காய் பூவுடன் தண்ணீர் ஊற்றி அரைக்கவும். தேங்காய் தண்ணீரும் சேர்த்து அரைக்கவும். தோசை மாவு பதத்தில் ரெடி செய்யவும்.

3.இந்த மாவு 4-5 மணி நேரம் அப்படியே மூடி போட்டு வைக்கவும்.

4.ஆப்பம் சூடும் முன்பு மாவில் சோடா மாவு மற்றும் சீனி சேர்த்து கலக்கவும். (ஆப்ப சோடா மாவினை நேராக மாவில் கலக்காமல் ஒரு கப்பில் சோடாமாவு போட்டு 1ஸ்பூன் தண்ணீர் ஊற்றி நன்றாக கலந்த பின்பு ஆப்ப மாவில் கலக்கவும்)

ஆப்பம் சூடும் முறை:

1.ஆப்ப சட்டி காய்ந்த பின்பு ஒரு குழிகரண்டி மாவு எடுத்து ஆப்ப சட்டியின் நடுவில் ஊற்றவும். ஆப்ப சட்டியின் கைபிடியினை பிடித்து மாவினை சுற்றி பரவலாக மாவினை நடுவில் பஞ்சு போலவும் சுற்றி வரை மெலிசாகவும் இருக்கனும். மூடி போட்டு வேகவிடவும். ஆப்பம் வேகும் வரை சிம்மில் வைக்கவும். பிறகு அப்படியே கரண்டி வைத்து எடுத்தால் அருமையான தொப்பி ஆப்பம் ரெடி. இதனுடன் தேங்காய் பால் ஊற்றி சாப்பிட சுவையாக இருக்கும்.

டிஸ்கி:

தேங்காய் தண்ணீர், சீனி சேர்ப்பதால் ஆப்பம் சுற்றி வரை நல்ல முறுகலாக வரும்.

பழைய சோறு சேர்ப்பதால் ஆப்பம் சாப்ட்டாக வரும்.

சைடு டிஷ் இனிப்பான தேங்காய்ப்பால் சேர்த்துச் சாப்பிடுவதாக இருந்தால் உப்பு கொஞ்சம் குறைவாக இருந்தால் ஆப்பம் சுவை நன்றாக இருக்கும். எனவே ஆப்பமாவில் உப்பு அதிகம் சேர்க்க வேண்டாம்.

புளிப்பான மாவு ஆப்பம் செய்ய நன்றாக இருக்காது. மாவு லேசாகப் புளித்து வரும்போதே பிரிஜ்ஜில் வைத்திருந்து பின் பயன்படுத்துவது நல்லது.

தேங்காய்ப்பால் வாழைப்பழம்செய்ய:

தேவையான பொருட்கள்:
தேங்காய் – 1 மூடி
வாழைப்பழம் – 1
ஏலக்காய் – 6
சர்க்கரை – தேவையான அளவு
தண்ணீர் – சிறிது
செய்முறை:

தேங்காயைத் துருவி மிக்ஸியில் போட்டு தண்ணீர் சிறிது சேர்த்து அரைக்கவும்.
தனியே ஒரு பாத்திரத்தில் துணியை விரித்து வைத்து அல்லது வடிகட்டி கொண்டு அரைத்த இந்த தேங்காயில் உள்ள பாலை வடிகட்டிப் பிழிந்து கொள்ளவும். இரண்டு முறை இப்படி செய்யவும்
(இவ்வளவும் செய்ய முடியாது என்பவர்கள் ரெடிமேடு தேங்காய்பால் வாங்கி பயன்படுத்தலாம்)
மிக்ஸியில் வாழைப்பழம் சீனி ஏலக்காய் பொடி சேர்த்து இரண்டு சுற்று சுற்றவும். பிறகு தேங்காய் பால் சேர்த்து தேவைக்கு தண்ணீர் சேர்த்து அரைத்து எடுக்கவும். அப்படியே ஆப்பம் முக்கி சாப்பிட சுவையாக இருக்கும்.

Post a Comment