தேங்காய் சட்னி

Loading...
Description:

chutney

சட்னி

தேங்காய் ( 4 மே. கரண்டி), பச்சை மிளகாய் (4), வெள்ளை பூண்டு (1 பல்), புளி (1/4 தே. கரண்டி), உப்பு சிறிதளவு சேர்த்து அரைத்து கொள்ளவும்.
வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி, கடுகு(1/4 தே. கரண்டி), உளுந்தம் பருப்பு (1/2 தே. கரண்டி), பெருங்காயம் (1/4 தே. கரண்டி), கருவேப்பிலை கொஞ்சம் போட்டு தாளிக்கவும்.
அரைத்ததை அதில் ஊற்றி கொதிக்கும் முன் இறக்கவும்.
 
சட்னியின் சுவைகள் :
 
அரைக்கும் போது, இஞ்சி (சிறிய துண்டு) வைத்து அரைக்கலாம். ஆனால் தாளிக்கும் போது அரைத்ததை அடுப்பை அணைத்துவிட்டு தாளித்ததுடன் சேர்க்கவும். கொதிக்க வைத்தால் இஞ்சியின் சுவை மாறிவிடும். அல்லது இஞ்சியை சிறியதாக நறுக்கி, தாளிக்கும் போது சேர்க்கலாம்.
 
சின்ன வெங்காயத்தை பொடியாக அரிந்து, தாளிக்கும் போது சேர்த்து வதக்கினால், தனி சுவையாக இருக்கும் சட்னி.
 
பொட்டு கடலை (தே கரண்டி ) சேர்த்து அரைத்தால், தண்ணீர் நிறைய சேர்த்து நன்கு கொதிக்க வைத்து இறக்கவும்.

 

Post a Comment