தூத் மக்கன்வாலா,Tamil Samayal,Tamil Recipes | Samayal in Tamil | Tamil Samayal|samayal kurippu,Tamil Cooking Videos,samayal,samayal Video,Free samayal Video

Loading...
Description:

North Indian Recipe: Doodh Makkanwala - Cooking Recipes in Tamil

பனீர்னு சொன்னாலே எல்லாருக்கும் நாவில் எச்சில் ஊரும், அதுலயும் ஸ்பெஷலா சீஸ் தூவி ஸ்பைஸியா சாப்பிட்டா…. ஆஹா…. ம்..ம்.. இப்பவே சாப்பிடணும் போல இருக்குதா?… இதோ உடனே செய்து சாப்பிடுங்க தூத் மக்கன்வாலா… சப்பாத்தி, நாண், பரோட்டாக்கு இதுதான் சரியான மேட்சுனு நீங்களே சொல்லுவீங்க……….

தேவையான பொருட்கள்:

பனீர் – 1\4 கிலோ
வெங்காயம் – 200 கிராம்
தக்காளி – 200 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
மிளகாய்தூள் – 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – 1\2 டீஸ்பூன்
தனியா தூள் – 2 டீஸ்பூன்
காய்ந்த வெந்தய இலை – 1\4 டீஸ்பூன்
கருப்பு உப்பு – 1\4 டீஸ்பூன்
தயிர் – 1 கப்
வெண்ணெய் – 50 கிராம்
பாலாடை – 4 டீஸ்பூன்

செய்முறை:

* பனீரை சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.

* வெங்காயம், தக்காளியைத் தனித்தனியே அரைத்து, வெண்ணெயில் ஒவ்வொன்றாக வதக்கவும்.

* இஞ்சி, பூண்டு விழுதும் சேர்த்து வதக்கவும்.

* மிளகாய்தூள், மஞ்சள்தூள், தனியாதூள் சேர்த்து வதக்கவும்.

* வெந்தய இலை, தயிர் சேர்க்கவும்.

* ஓரளவு கொதித்ததும் பனீர் துண்டுகள் சேர்க்கவும்.

* விருப்பப்பட்டால் சிகப்பு கலர் சேர்க்கலாம்.

* நன்றாகக் கொதித்ததும், பாலாடை சேர்த்து, பச்சை வெங்காயம், தக்காளி மற்றும் எலுமிச்சை பழ வில்லைகளுடன் பரிமாறவும்.

என்ன இருக்கு?

பன்னீரில் புரோட்டீன், வைட்டமின் நிறைய உண்டு. கொலஸ்ட்ரால் கிடையாது. தயிரிலும், வெண்ணெயிலும் கொழுப்பும், கால்சியமும் உண்டு.

Post a Comment