துபாய் செல்லும் முன் ஸ்ரீதேவி தன் தோழியிடம் கூறிய விஷயம் – அதிர்ச்சி தகவல்

Loading...
Description:

நடிகை ஸ்ரீதேவி தன் நெருங்கிய உறவினர் ஒருவரின் திருமணத்திற்காக குடும்பத்துடன் துபாய் சென்றார். அங்கு பார்ட்டியில் மது அருந்திய பிறகு அவரின் ஹோட்டல் பாத்ரூமில் உள்ள தொட்டியில் தவறி விழுந்து மூழ்கி இறந்து கிடந்துள்ளார்.

இந்நிலையில் ஸ்ரீதேவியின் தோழியான பிங்கி ரெட்டி ஒரு பிரபல நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் ஒரு புதிய தகவலை வெளியிட்டுள்ளார்.

“ஸ்ரீதேவி துபாய் கிளம்பும் அன்று அவருடன் போனில் பேசினேன். அப்போது அவருக்கு கடும் ஜுரம் இருப்பதாக என்னிடம் கூறினார், ஆன்டிபயோடிக் மருந்துகள் எடுத்துவருவதாகவும் தெரிவித்தார். உடல்நிலை சரியில்லை என்றாலும் திருமணத்திற்க்கு நிச்சயம் சென்றே ஆக வேண்டும் என்று ஸ்ரீதேவி முடிவெடுத்தார்” என பிங்கி ரெட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் ஸ்ரீதேவி இறந்தபிறகு அவரை பற்றி பல்வேறு வதந்திகள் மற்றும் சர்ச்சைகள் பற்றி பலரும் பேசிவருவது வருத்தமளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment