தியானத்தில் ஈடுபடுவது எப்படி?

Loading...
Description:

images
‘தியானம் செய்யும்போது பல வேதியல் மாற்றங்கள் நடைபெற்று உடலைத் தளர்வாக்குகின்றன. இதனால் இதயத்துடிப்பு, ரத்த அழுத்தம், சுவாசம், மூளையின் வேதியல் செயல்கள் எல்லாமே சீராகின்றன. சரி, எப்படித் தியானம் செய்வது? முதலில் யோகா, பின்னர் பிரணாயாமம் என்கிற மூச்சுப்பயிற்சி, கடைசியில்தான் தியானம்.

இந்த முறைப்படி செய்வதுதான் முழுமையான தியானமே தவிர, ஒரே இடத்தில் உட்கார்ந்து கண்களை மூடிக்கொண்டிருப்பது மட்டும் தியானம் அல்ல. யோகாவில் உள்ள பத்மாசன நிலைதான் தியானம் செய்வதற்கு ஏற்றது. தியானம் செய்யும்போது உடல், மனம் – இந்த இரண்டைப் பற்றியும் எந்த நினைவு களும் வரக்கூடாது.

ஆரம்பத்தில் வேண்டுமானால் அவ்வாறு நிகழலாம். ஆனால், போகப்போக மனதைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிட முடியும். டென்ஷனைத் தவிர்க்க வஜ்ராசனம், பத்மாசனம், புஜங்காசனம், தனுராசனம், சலபாசனம் போன்றவற்றையும் செய்யலாம். ஆனால், பயிற்சி பெற்ற நிபுணரின் ஆலோசனைப்படி இவற்றைச் செய்ய வேண்டியது அவசியம்.’

Post a Comment