தினமும் எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்?

Loading...
Description:

625.0.560.350.160.300.053.800.668.160.90 (6)

ஆரோக்கிய வாழ்வுக்கு சத்தான உணவு மட்டுமின்றி உடற்பயிற்சியும் இன்றியமையாத ஒன்று.

தினமும் நாம் சாப்பிடும் உணவுகளில் நமது உடல் தேவையான சத்துக்களை மட்டும் எடுத்துக் கொண்டு மற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது.

இதற்கு செரிமானம் சீரான நிலையில் இருப்பது அவசியமாகிறது, இதற்கு உடலில் உள்ள தசைகள், உள் உறுப்புகள் முறையாக இயங்க வேண்டும்.

இதற்கு தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம், அதாவது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

உடலின் தசைகளை சுறுசுறுப்பாக வைக்க மூன்று பயிற்சி முறைகள்,

பயிற்சி- 1

ஒரு அடி அகலம் இடைவெளி இருக்குமாறு, இரண்டு கால்களையும் இடைவெளி விட்டு வைத்துக் கொண்டு நிமிர்ந்து நின்று கொண்டு மூச்சை நன்கு இழுத்து விட வேண்டும். இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும்.

பயிற்சி- 2

முதல் பயிற்சியை போல் நின்று கொண்டு, மூச்சை நன்றாக உள்ளே இழுத்து, கால்களை உயர்த்தி முன் பாதங்களில் நின்று, சற்று நேரம் கழித்து முன் நிலைக்கு வந்து மூச்சை விட வேண்டும், இவ்வாறு 15 முறை செய்ய வேண்டும்.

பயிற்சி- 3

முதல் பயிற்சியை போல் இரு கைகளும் தொடையின் பக்கவாட்டில் வைத்துக் கொண்டு மூச்சை நன்றாக இழுத்து, கைகளை பக்கவாட்டில் தோள் அளவுக்கு உயர்த்தி, பின் மூச்சை விட வேண்டும், இவ்வாறு 20 முறை செய்ய வேண்டும்.

இவ்வாறு தினமும் 30 நிமிடம் உடற்பயிற்சியை செய்து வந்தால் நமது உடல் தசைகளின் இயக்கம், ரத்த ஓட்டம் சீராக இருப்பதுடன் உடலுக்கு தேவையான சக்திகள் கிடைப்பதோடு, உடலும் பொலிவடையும்.

Post a Comment