தாமரை பூ டீ

Loading...
Description:

தாமரை பூ டீதேவையான பொருட்கள்:

சிவப்பு தாமரை பூ இதழ்கள் – 10
தண்ணீர் – 2 கப்
உலர் திராட்சை – 5
கருப்பட்டி – தேவையான அளவு
செய்முறை:

* தாமரை இதழ் மற்றும் உலர் திராட்சையை லேசாக இடித்து வைத்துக் கொள்ளவும்.

* 2 கப் நீரினை அடுப்பில் கொதிக்க வைத்து அதில் தாமரை இதழ் மற்றும் உலர்ந்த திராட்சையை சேர்த்து கொதிக்க வைத்து, நீர் பாதியளவு வற்றியதும் வடிகட்டி கருப்பட்டி சேர்த்து மிதமான சூட்டுடன் பருகவும்.

* உடலில் ஏற்படும் சூட்டை தணித்து பித்தத்தை குறைக்கும். இதயத்திலுள்ள திசுக்களையும், ரத்த நாளங்களையும் பலப்படுத்தக் கூடியது. ஞாபக மறதி உள்ளவர்கள் இதனை கஷாயமாக செய்து சாப்பிட்டு வர குணம் கிடைக்கும். இக்குடிநீரை பருகினால் மாத்திரைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறையும். இது இருமலுக்கு ஒரு சிறந்த மருந்தாகும்.

Post a Comment