தலைமுடியின் வளர்ச்சியை அதிகரிக்க உதவும் 6 எளிய வழிகள்! l

Loading...
Description:
ஒருவருக்கு அழகான தோற்றத்தைக் கொடுப்பதில் தலைமுடி முக்கிய பங்கை வகிக்கிறது. அத்தகைய தலைமுடி தற்போது பலருக்கும் அதிகமாக உதிர்ந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக ஆண்களுக்கு அதிகம் கொட்டுகிறது. இதனால் சொட்டை விழுந்துவிடுமோ என எண்ணி பல ஆண்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாகின்றனர். அதுமட்டுமின்றி தலைமுடி உதிர்வதைத் தடுத்து, அதன் வளர்ச்சியை அதிகரிக்க நிறைய பணம் செலவழித்து பல சிகிச்சைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்

07-1452145894-1-onionjuice

வெங்காய சாறு வெங்காயத்தில் உள்ள சல்பர் கொலாஜென் திசுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும். இந்த திசுக்கள் தான் முடியின் வளர்ச்சிக்கு உதவுகிறது. ஆனால் இந்த திசுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும் வெங்காயத்தைக் கொண்டு தலைமுடியைப் பராமரித்து வந்தால், தலைமுடி உதிர்வதைக் குறைத்து, அதன் வளர்ச்சியை அதிகரிக்கலாம். அதற்கு 2-4 வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, வாரம் ஒருமுறை அந்த சாற்றினை ஸ்கால்ப்பில் படும்படி மசாஜ் செய்து 15 நிமிடம் அல்லது 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்புவால் தலைமுடியை அலச வேண்டும்.

முட்டை முடி புரோட்டீனால் ஆனது. ஆகவே முடியின் வளர்ச்சியை அதிகரிக்க வேண்டுமானால், புரோட்டீன் நிறைந்த பொருட்களால் பராமரிப்பு கொடுக்க வேண்டும். இத்தகைய புரோட்டீன் முட்டையில் ஏராளமாக நிறைந்துள்ளது. எனவே 2 முட்டையின் வெள்ளைக்கருவை ஒரு பௌலில் எடுத்து, அத்துடன் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை பின்பற்றி வந்தால், முடிக்கு வேண்டிய புரோட்டீன் கிடைத்து தலைமுடி நன்கு வளரும்.

07-1452145944-8-amla

நெல்லி, சீகைக்காய், பூந்திக் கொட்டை 100 கிராம் நெல்லி, 100 கிராம் சீகைக்காய், 100 கிராம் பூந்திக்கொட்டையை 2 லிட்டர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த கலவையை அடுப்பில் வைத்து, தண்ணீர் பாதியாக குறையும் வரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, குளிர்ந்ததும் கையால் அந்த பொருட்களை மசித்து, அதனை ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி 5 நிமிடம் ஊற வைத்து, பின் தேய்த்து நீரில் அலசிவிட வேண்டும். இப்படி வீட்டிலேயே ஷாம்பு செய்து குளித்து வந்தால், தலைமுடி உதிராமல் நன்கு செழித்து வளரும்.

Post a Comment